«مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللهُ بِهَا مِنْ خَطَايَاهُ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 5641]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா மற்றும் அபூ ஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் கூறுகின்றார்கள்:
'ஒரு முஸ்லிமை தைக்கும் முள் உட்பட, அவனுக்கு நேரிடும் சிரமம், நோய், கவலை, துக்கம், மனவேதனைகள் ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவனின் பாவத்தின் சிலதை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.'
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோய்கள் கவலைகள் துன்பங்கள் சோதனைகள் பேரிடர்கள் கஷ்டங்கள் பயம் பசி –உடலில் தைக்கும் முள்ளால் ஏற்படும் வலி உட்பட- அனைத்தும் அவனின் பாவத்திற்கு பரிகாரமாகவும், அவனின் குற்றங்களை அழித்துவிடும் விடயங்களாகவும்; அவை உள்ளன என தெளிவுபடுத்துகிறார்கள்.