உப பிரிவுகள்

ஹதீஸ் அட்டவணை

1. அல்லாஹ்வின் தூதரே! எந்த துஆ அல்லாஹ்விடத்தில் மிகவும் ஏற்றுக்கொள்ளப் படக்கூடியது என நபி(ஸல்) அவர்களிடத்தில் கேட்கப்பட்டது. இரவின் கடைசி நேரத்திலும் பர்ளான தொழுகைக்கு பின்னும் என்றார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
2. அபூ ஹுரைரா ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள். "ஒரு அடியான் (நல்லதா?கெட்டதா? என) சிந்திக்காமல் பேசுகிறான், அதன் மூலம் அவன் கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையே உள்ள மிக தூரமான அளவுக்கு நரகில் வீழ்வான்" என நபி (ஸல்) கூறினார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
3. அவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடவுங்கள்.ஏனெனில் அவர்களின் மீது சுமத்தப்பட்டது எதுவோ அதனை அவர்கள் செய்வது அவர்களின் கடமை. உங்கள் மீது சுமத்தப்பட்டது எதுவோ அதனை நீங்கள் செய்வது உங்களின் கடமை,
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
4. அல்லாஹ்வே! என்னுடைய பிழைகளையும், எனது அறியாமையையும் எனது மிதமிஞ்சிய கருமங்களையும் மற்றும் என்னை விடவும் நீ அறிந்திருக்கும் எனது ஏனைய தவறுகளையும் நீ மன்னித்தருள்வாயாக.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
5. அல்லாஹ்வே! உன் அருள் இல்லாமற் போவதையும்,நீ அளித்திருக்கும் உன் ஆரோக்கியம் அகன்று விடுவதையும், உன் திடீர் தண்டனையும்,மற்றும் உன் சகல கோபங்களையும் விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
6. நிச்சயமாக ஷைத்தான் அரபுத் தீபகற்பத்தில் தொழுபவர்கள் தன்னை வணங்குவார்கள் என்பதிலிருந்து நிராசையடைந்து விட்டான். ஆனால் அவர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, பிளவை ஏற்படுத்துவதில் நம்பிக்கை வைத்துவிட்டான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு