«إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا يَتَبَيَّنُ مَا فِيهَا، يَهْوِي بِهَا فِي النَّارِ أَبْعَدَ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 2988]
المزيــد ...
அபூ ஹுரைரா ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் "ஒரு அடியான் (நல்லதா,கெட்டதா என) சிந்திக்காமல் பேசுகிறான். அதன் மூலம் அவன் கிழக்குக்கும் மேற்குக்குமிடையே உள்ள மிகத்தூரமான அளவுக்கு நரகில் வீழ்வான்" என நபி (ஸல்) கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
நபி (ஸல்)அவர்கள் பேசும் சந்தர்ப்பத்தில் தான் சொல்லும் விடயம் நன்மையானதா இல்லையா என்பது குறித்து சிந்திக்காத சில மனிதர்கள் குறித்து எமக்கு இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு சிந்திக்காது பேசுகிறவர் அதன் விளைவால் அல்லாஹ் தடைசெய்த ஒரு விடயத்தில் தன்னை வீழ்த்திக் கொள்கிறார். ஆதலால் நரகில் அல்லாஹ்வின் வேதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்கிறார். அல்லாஹ் பாதுகாப்பானாக. சில வேளை இவ்வாறான செயலால் நரகினுள் வீழ்ந்து விடுகிறான் அந்நரகத்தின் விஸ்தீரணம் கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையே உள்ளதை விட மிக தூரமாகும்