«رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي كُلِّهِ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَايَايَ، وَعَمْدِي وَجَهْلِي وَهَزْلِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6398]
المزيــد ...
அல்லாஹ்வே! என்னுடைய பிழைகளையும், எனது அறியாமையையும் எனது மிதமிஞ்சிய கருமங்களையும், மற்றும் என்னை விடவும் நீ அறிந்திருக்கும் எனது ஏனைய தவறுகளையும் நீ மன்னித்தருள்வாயாக.அல்லாஹ்வே! எனது தீவிர மற்றும் மந்த நிலையையும்,மேலும் எனது எண்ணத்தின்படி நடந்த எனது தவறுகளையும் மேலும் என்னிடமிருக்கும் மற்றெல்லா தவறுகளையும் நீ மன்னித்தருள்வாயாக.மேலும் செய்யக் கூடாததை நான் செய்ததால் நிகழ்ந்த எனது பாவங்களையும்,மேலும் நான் கடமையைப் பிற்படுத்தியமையால் நிகழ்ந்த எனது பாவங்களையும் இன்னும் நான் மறைவாகவும், பகிரங்கமாகவும் செய்த தவறுகளையும்,இன்னும் என்னை விடவும் நீ அறிந்திருக்கும் எனது ஏனைய தவறுகளையும் நீ மன்னித்தருள்வாயாக.ஏனெனில் நீயோ எல்லாவற்றை விடவும் முந்தியவனாகவும்,மற்றும் எல்லாவற்றை விடவும் இறுதியானவனாகவும் இருக்கின்றாய்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்,என அபூ மூஸா அல்அஷ்அரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
ஹதீஸ் விளக்கம்:சகல வித பாவ காரியங்களையும், தவறுகளையும் விட்டும் மன்னிப்புக் கோறுகின்ற இந்த மகத்தான வாசகங்களைக் கொண்டு ரஸூல் (ஸல்) மிகப் பணிவுடன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள். எனவே நபியவர்களை முன்மாதிரியாகக் கொண்டு எல்லா முஸ்லிம்களும் இந்த துஆவைக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது சிறந்ததாகும்.