عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

அல்லாஹ்வே! உன் அருள் இல்லாமல் போவதையும்,நீ அளித்திருக்கும் உன் மன்னிப்பு அகன்று விடுவதையும்,உன் திடீர் தண்டனையும்,மற்றும் உன் சகல கோபங்களையும் விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்,என்று ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்கின்றவராக இருந்தார்கள்,என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள்அறிவிக்கி்றார்கள்
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

மகத்தான இந்த பிரார்த்தனையில் "அல்லாஹ்வே! உன் அருள் இல்லாமற் போவதையும், நீ அளித்திருக்கும் உன் ஆரோக்கியம் அகன்று விடுவதையும், உன் திடீர் தண்டனையையும், மற்றும் உன் சகல கோபங்களையும் விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். என்று ரஸூல் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.அதாவது உன் அருள் எதுவும் நீங்கி விடாமலும்,நோய், வறுமை போன்றவற்றின் காரணமாக நீ அளித்திருக்கும் ஆரோக்கியம் பெயர்ந்து விடாமலும் இருக்கும் பொருட்டு நான் உன் பக்கம் திரும்பி உன்னைப் பற்றிப் பிடித்துக் கொள்கின்றேன்."என்று இகபரத்தின் வெறுக்கத் தக்க சகல விடயங்களிலிருந்தும் ஈடேற்றம் பெறவும், மேலும் உனது தண்டைனையில் இருந்தும் திடீர் பழிவாங்கலை விட்டும் பாதுகாவல் தேடும் பொருட்டு நாம் உன்னிடம் மீளுகின்றோம்.என்றும் அல்லாஹ்விடம் வேண்டிக் கொண்ட நபியவர்கள், அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்காகக் கூடிய சகல கருமங்களையும், மற்றும் கோபத்தையும் விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடி தங்களின் துஆவை நிறைவு செய்தார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம்
மொழிபெயர்ப்பைக் காண

பொருள் பதிவிறக்கம்

மேலதிக விபரங்களுக்கு