«لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ، فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6077]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
'ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. (மேலும்) அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வது ஆகுமனதல்ல, இவர்களில் ஸலாமை கொண்டு முதலில் முந்திக்கொண்டவரே இவர்கள் இருவரில் சிறந்தவராவார்'.
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை மூன்று தினங்களுக்கு மேல் வெறுத்து, ஒருவர் மற்றவரை சந்தித்தும் ஸலாம் கூறாமல், கதைக்காமல் முகத்தைத் திருப்பிக் கொள்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
பகைத்துக்கொண்ட அவ்விருவரில் மிகவும் சிறப்புக்குரியர் தனது சகோதரனுடனான மனவெறுப்பை அகற்றிக்கொள்வதற்காக ஸலாம் கூறுவதில் முந்திக்கொண்டவராவார். இங்கு ஹஜ்ர்- வெறுத்தல்-புறக்கணித்தல்- என்பது ஒருவரின் சொந்த நலனுக்காக வெறுப்பதைக் குறிக்கிறது. ஆனால் அல்லாஹ்வின் உரிமையுடன் தொடர்புடைய, பாவிகள், பித்அத் செய்வோர் தீய நண்பர்கள் ஆகியோரை வெறுத்து நடப்பதில் குறிப்பிட்ட கால வரையறை கிடையாது. காரணம் குறிப்பிட்ட நலனானது புறக்கணித்தல் என்பதுடன் தொடர்புடையது. குறிப்பிட்ட இப்பாவங்கள் எப்போது அவர்களைவிட்டு நீங்கி விடுகிறதோ அப்போது வெறுத்து நடத்தல் என்ற விடயமும் நீங்கிவிடுகிறது.