பிரிவுகள்:
+ -
عن أبي هريرة رضي الله عنه

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا يَحْكِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ، قَالَ: «أَذْنَبَ عَبْدٌ ذَنْبًا، فَقَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى: أَذْنَبَ عَبْدِي ذَنْبًا، فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ، وَيَأْخُذُ بِالذَّنْبِ، ثُمَّ عَادَ فَأَذْنَبَ، فَقَالَ: أَيْ رَبِّ اغْفِرْ لِي ذَنْبِي، فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى: عَبْدِي أَذْنَبَ ذَنْبًا، فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ، وَيَأْخُذُ بِالذَّنْبِ، ثُمَّ عَادَ فَأَذْنَبَ، فَقَالَ: أَيْ رَبِّ اغْفِرْ لِي ذَنْبِي، فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى: أَذْنَبَ عَبْدِي ذَنْبًا، فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ، وَيَأْخُذُ بِالذَّنْبِ، اعْمَلْ مَا شِئْتَ فَقَدْ غَفَرْتُ لَكَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 2758]
المزيــد ...

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:
உயர்வும் கண்ணியமிக்கோனாகிய தம் இறைவன் அறிவித்ததாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: 'ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு 'இறைவா! (நான் ஒரு பாவம் செய்து விட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!' என்று கூறினார். உடனே உயர்வும் கண்ணியமும் மிக்கவனாகிய இறைவன், 'என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான் பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான்' என்று சொல்கிறான். பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, 'என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!' என்று பிரார்த்தித்தார். அப்போதும் உயர்வும் கண்ணியமும் மிக்கவனாகிய அல்லாஹ் -இறைவன்- , '(இம்முறையும்) என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான். எனது அடியானை மன்னித்து விட்டேன், அவன் நாடியதைச் செய்யட்டும்' என்று சொல்கிறான்.

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 2758]

விளக்கம்

இந்த ஹதீஸை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது இரட்சகனிடமிருந்து அறிவிக்கிறார்க்ள். ஒரு அடியான் ஒரு பாவத்தை செய்துவிட்டு பின்னர் யாஅல்லாஹ் எனது -குற்றத்தை –பாவத்தை எனக்கு மன்னித்தருள்வாயாக என்று கூற, அதற்கு அல்லாஹ் எனது அடியான் ஒரு பாவத்தை செய்துவிட்டு அவனது அப்பாவத்தை மன்னிக்க இறைவன் உள்ளான் என்பதை அறிந்துள்ளான். எனவே அவனுடைய பாவத்தை மன்னித்து அதனை மறைத்துவிடுகிறான். இவ்வாறான ஒரு நபருக்கு அல்லாஹ் நான் அவனை மன்னித்துவிட்டேன் என்று கூறுகிறான். மீண்டும் அந்த அடியான் பாவத்தை செய்துவிட்டு பின்னர் யாஅல்லாஹ் எனது -குற்றத்தை –பாவத்தை எனக்கு மன்னித்தருள்வாயாக என்று கூற அதற்கு அல்லாஹ் எனது அடியான் ஒரு பாவத்தை செய்துவிட்டு, அவனது அப்பாவத்தை மன்னிக்க இறைவன் உள்ளான் என்பதை அறிந்துள்ளான். எனவே அவனுடைய பாவத்தை மன்னித்து அதனை மறைத்துவிடுகிறான். இவ்வாறான ஒரு நபருக்கு அல்லாஹ் நான் அவனை மன்னித்துவிட்டேன் என்று கூறுகிறான். மீண்டும் மூன்றாவது தடவையாகவும் அந்த அடியான் பாவத்தை செய்துவிட்டு பின்னர் யாஅல்லாஹ் எனது -குற்றத்தை –பாவத்தை எனக்கு மன்னித்தருள்வாயாக என்று கூற அதற்கு அல்லாஹ் எனது அடியான் ஒரு பாவத்தை செய்துவிட்டு அவனது அப்பாவத்தை மன்னிக்க இறைவன் உள்ளான் என்பதை அறிந்துள்ளான். எனவே அவனுடைய பாவத்தை மன்னித்து அதனை மறைத்துவிடுகிறான். இவ்வாறான ஒரு நபருக்கு அல்லாஹ் நான் எனது அடியானை மன்னித்துவிட்டேன் என்பதாகக் கூறுகிறான். அந்த அடியான் பாவம் செய்துவிட்டு அதனை விட்விட்டுகிறான், பின்னர் அதற்காக வருந்தி மீண்டும் அப்பாவகாரியத்திற்கு செல்வதில்லை என்று மனஉறுதி கொள்கிறான். இவ்வாறு இருக்கையில் அவனின் மனம் அவனை ஆட்கொண்டு மீண்டு அப்பாவ காரியத்தில் வீழ்ந்து விடுகிறான். இப்படியிருக்கும் ஒரு அடியானை -அதாவது பாவம்செய்வதும் அதற்காக பாவமீட்சி கோருவதும் என்ற நிலையில் இருப்பவனை- அல்லாஹ் தான் மன்னித்து விடுவதாக கூறுகிறான். ஏனெனில் தவ்பாவானது முன் செய்தபாவங்களை அழித்துவிடுகிறது.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மனிதன் எவ்வளவு பாவங்கள் செய்தபோதிலும் அதற்காக அல்லாஹ்விடம் மீண்டும் மீண்டும் தவ்பா செய்கிற போது அதனை ஏற்று அங்கீகரிக்கிறான். இது அல்லாஹ் தனது அடியார்களுடன் கொண்டுள்ள கருணையின் விசாலத்தை எடுத்துக் காட்டப்படுகிறது.
  2. அல்லாஹ்வை விசுவாசிக்கும் அடியான் தனது இரட்சகனின் மன்னிப்பை ஆதரவு வைப்பவனாகவும், அவனின் தண்டனைக்குப் பயந்தவனாகவும் இருப்பான். ஆகையால் இறைமன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு விரைவதோடு அப்பாவகாரியத்தில் தொடர்ந்தும் இருக்கமாட்டான்.
  3. உண்மையான தவ்பாவின் நிபந்தனைகள் : பாவத்திலிருந்து முற்றும் முழுதாக விலகிக்கொள்ளுதல், அதற்காக வருந்துதல், மீண்டும் அப்பவாத்தின் பால் செல்விதில்லை என சபதம் கொள்ளுதல், குறிப்பிட்ட பாவமானது அடியார்களுடன் -மனிதர்களுடன் தொடர்பான செல்வம், மானம், உயிர் போன்ற விடயங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தால் நான்காவது நிபந்தனையாக குறிப்பிட்ட மனிதரிடம் மன்னிப்புக் கோரியோ அல்லது அவரது உரித்தை வழங்குவதன் மூலமோ தன்னை விடுவித்துக்கொள்ளல்.
  4. அல்லாஹ்வைப் பற்றிய அறிவின் முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ் பிரதிபளிக்கிறது. காரணம் ஒரு அடியான் மார்க்க விவகாரங்கள் பற்றி அறிந்தவனாக இருப்பது அவன் தவறு செய்யும் போதெல்லாம் நிராசை அடையாது, அதே தவறில் தொடர்ந்தும் இருக்காது அல்லாஹ்விடம் தவ்பா கோர அவனை நிர்ப்பந்தித்து விடுகிறது.
الملاحظة
أهمية العلم بالله الذي يجعل العبد عالمًا بأمور دينه فيتوب كلّما أخطأ، فلا ييأس ولا يتمادى.
فائدة
النص المقترح هذا الحديث مما يرويه النبي صلى الله عليه وسلم عن ربه، ويسمى بالحديث القدسي أو الإلهي، وهو الذي لفظه ومعناه من الله، غير أنه ليست فيه خصائص القرآن التي امتاز بها عما سواه، من التعبد بتلاوته والطهارة له والتحدي والإعجاز وغير ذلك.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية الطاجيكية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ الفولانية Итолёвӣ Урумӣ Канада الولوف البلغارية Озарӣ اليونانية الأكانية الأوزبكية الأوكرانية الجورجية المقدونية
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு