عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ، وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ، وَفِيهِ أُخْرِجَ مِنْهَا، وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا فِي يَوْمِ الْجُمُعَةِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 854]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டார்கள் அந்நாளில் தான் சுவர்க்கத்தினுள் தங்கவைக்கப் பட்டு அந்நாளில் தான் அதிலிருந்து வெளியேற்றவும் பட்டார்கள். அத்துடன் யுக முடிவு நாளும் ஜும்ஆத் தினத்தில்தான் நிகழும்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 854]
சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்த நாள் ஜும்ஆ தினமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இத்தினத்தின் சிறப்புகள் சில பின்வருமாறு : இந்நாளில் ஆதம் அலைஹிஸ்லாம் படைக்கப்பட்டமை. சுவர்க்கத்தினுள் நுழைவிக்கப்பட்டமை, அதிலிருந்து வெளியேற்றபட்டு பூமிக்கு இறக்கப்பட்டமை, இந்நாளில் யுகமுடிவு நிகழ்கின்றமை போன்றனவாகும்.