+ -

عن أبي سعيد رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم يقول: «إذا وُضِعت الجَنَازَة واحْتَمَلَهَا الناس أو الرجال على أَعْنَاقِهِم، فإن كانت صالحة، قالت: قَدِّمُونِي قَدِّمُونِي، وإن كانت غير صالحة، قالت: يا وَيْلها! أين تَذهبون بها؟ يسمعُ صوتها كل شيء إلا الإنسان، ولو سَمِعَه صَعِق».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

ஜனாஸாவை பல்லக்கில் வைத்ததுவும் அதனை மனிதர்கள் அல்லது ஆண்கள் தங்களின் தோல் மீது வைத்து சுமந்து செல்லும் போது அது ஸாலிஹானதாக இருப்பின் அது "என்னை முற்படுத்துங்கள்,என்னை முற்படுத்துங்ள்" என்றும்.அது ஸாலிஹான ஜனாஸாவாக இல்லையெனில் அது "தனக்கு ஏற்பட்ட கேடே! இதனை எங்கே கொண்டு செல்கிறீர்கள்" என்றும் கூறும்.அதன் சப்தத்தை மனிதனைத் தவிர ஏனைய பொருட்கள் யாவும் செவிமடுக்கும்.அதனை மனிதன் கேட்டால் அவன் மூர்ச்சையுற்று விழுவான்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸஈத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

விளக்கம்

ஹதீஸ் விளக்கம்:ஜனாஸா பல்லக்கில் வைக்கப்பட்ட பின்னர் அதனை ஆண்கள் தங்களின் தோல்களின் மீது சுமந்து செல்வார்கள்.அப்பொழுது அது நல்லோரைச் சார்ந்ததெனில் அது தனக்கு முன்னால் சுவர்க்கத்தின் சுகபோகங்களைக் காணும்.அதன் மகிழ்ச்சியில் அது என்னை அவசரமாக எடுத்துச் சோல்லுங்கள்,என்று கூறும்.ஆனால் அது நல்லோரைச் சார்ந்ததாக இல்லாது போனால் அது தனக்கு முன்னால் கேடுகள் இருப்பதைக் காணும்.ஆகையால் அது முன்னேறிச் செல்வதை விரும்பாது.எனவே அது தனது பந்துக்களிடம்,தனக்கு ஏற்பட்டிருக்கும் அழிவே! வேதனையே! என்று கூறும்.அதன் சப்தத்தை மனிதனைத் தவிர ஏனைய மிருகங்கள்,சடங்கள் என சகல சிருஷ்ட்டிகளும் செவியுறும்.மனிதன் அதன் ஒலியைக் கேட்டாலோ அவன் மயக்கமுற்று கீழே வீழ்வான்.அல்லது அழிந்து போவான்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா ஸ்வாஹிலி தாய்லாந்து Осомӣ الأمهرية الهولندية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு