«مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ {الم} حَرْفٌ، وَلَكِنْ {أَلِفٌ} حَرْفٌ، وَ{لَامٌ} حَرْفٌ، وَ{مِيمٌ} حَرْفٌ».
[حسن] - [رواه الترمذي] - [سنن الترمذي: 2910]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
'யார் அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆனில் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும், அந்த ஒரு நன்மை பத்து மடங்காகும். அலிப், லாம், மீம் என்பது ஓரெழுத்து எனக் கூற மாட்டேன், மாறாக அதில் அலிப் (ا) ஓரெழுத்து, (ل) லாம் ஓரெழுத்து, (م) மீம் ஓரெழுத்தாகும்'.
அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு நன்மை உண்டு எனவும், அது அதே போன்று பத்து மடங்காக பன்மடங்காக்கப்படும் எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.
நபியவர்கள் இதனை பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது 'நான் அலிப் லாம் மீம்' என்பதை ஓரு ஹர்ப் -எழுத்து- எனக் கூறாமாட்டேன். மாறாக அலிப் ஓர் எழுத்து, லாம் ஓர் எழுத்து, மீம் ஓர் எழுத்து, ஆகவே இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு நன்மை வீதம் மூன்று நன்மைகள் கிடைப்பதுடன் இதன் பத்து மடங்கு முப்பது ஆகும்.
الحث على الإكثار من تلاوة القرآن.على قرون الموج في