«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ جَسَدِهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِهِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 245]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
''அழகிய முறையில் வுழூ செய்பவரின் (சிறு)பாவங்கள் நகங்களின் கீழ் உட்பட உடலின் எல்லாப் பகுதியிலிருந்தும் வெளியேறி விடுகின்றன''.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 245]
யார் வுழுவின் ஸுன்னத்துக்களையும் அதன் ஒழுங்குகளையும் பேணி வுழூ செய்கிறாரோ அது அவரின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாக அமைந்து விடுவதுடன், அவரின் பாவங்கள் அவரின் கை மற்றும் கால் நகங்களின் கீழாலும் வெளியேறிவிடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.