عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللهُ بِهِ الْخَطَايَا، وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ؟» قَالُوا بَلَى يَا رَسُولَ اللهِ قَالَ: «إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ، وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ، وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ، فَذَلِكُمُ الرِّبَاطُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 251]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
அல்லாஹ் உங்களது தவறுகளை அழித்து, அந்தஸ்த்துக்களை உயர்த்தக்கூடிய ஒரு விடயத்தை காட்டித் தரட்டுமா? என நபியவர்கள் கேட்டதற்கு,ஸஹாபாக்கள்: ஆம் யாரஸுலல்லாஹ் என்றார்கள். அதற்கு நபியவர்கள்: சிரமமான நிலையிலும் வுழுவை நிரப்பமாக செய்தல், பள்ளிவாயிலுக்கு அதிகம் நடந்து செல்லுதல், ஒரு தொழுகைக்குப் பின்னர் இன்னோர் தொழுகையை எதிர்பார்த்திருத்தல் என்பனதான் அவை. உண்மையில் அவை அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதாகும்.'
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 251]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களிடம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு மலக்குமார்களின் ஏட்டிலிருந்து அவை முழுமையாக அழிக்கப்பட்டு சுவர்க்கத்தின் உயர் அந்தஸ்த்தைப் பெற்றுக்கொள்ளத்தக்க செயல்கள் குறித்து அறிய விரும்புகிறீர்கள்? என வினவினார்கள்.
அதற்கு நபித்தோழர்கள் நாம் அதனை விரும்புகிறோம் என்றார்கள். அதற்கு நபியவர்கள் :
முதாலாவது : குளிர், குறைவான நீர், உடல் வலி, சூடான நீர் போன்ற சிரமமான சூழ்நிலைகளிலும் வுழுவை நிறைவாகவும் பூரணமாகவும் செய்தல்.
.
இரண்டாவது: வீடு தூரத்தில் இருப்பினும் அதிமாக பள்ளிக்கு நடந்து செல்லுதல். அதிகமாக சென்று வருதல்.
மூன்றாவது: தொழுகை நேரத்தை எதிர்பார்த்து அந்த சிந்தனையில் இருப்பதோடு அதற்குகாக எப்போதும் தயாராக இருத்தல். அத்துடன் ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் அமர்ந்திருந்தல். ஒரு தொழுகை நிறைவேற்றி முடிந்ததும் இன்னொரு தொழுகையை எதிர்பார்த்திருத்தல்.
பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த விடயங்கள் எதிரிகளின் தாக்குதலிருந்து நாட்டினை பாதுகாக்கும் உண்மையாக எல்லைப் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவதற்கு ஈடாகும் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள். இச்செயற்பாடு உள்ளத்தை ஷைத்தானின் வழிகளிலிருந்து தடுக்கிறது. மனோ இச்சையை அடக்குகிறது. மனசாட்டத்திற்குற்படுவதை தடுக்கிறது இதன் மூலம் ஷைத்தானின் படைகளை அல்லாஹ்வின் படை -கூட்டம் அடக்கிவிடுகிறது. இதுவே மிகப்பெரும் அறப்போராட்டமாகும். இது எதிரிகளின் எல்லையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுதல் என்ற படித்தரத்தில் காணப்படுகிறது.