«قَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى: أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ، مَنْ عَمِلَ عَمَلًا أَشْرَكَ فِيهِ مَعِي غَيْرِي تَرَكْتُهُ وَشِرْكَهُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2985]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'தூய்மையும்; உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களைவிட்டும் இணை கற்பித்தலைவிட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்'.
இணையாளர்களின் இணைவைப்பை விட்டும் அல்லாஹ் முற்றாகத் தேவையற்றவன். ஏனெனில் அவன் எல்லாப்படைப்பினங்ளை விட்டும் எவ்விதத் தேவையுமற்ற தன்னிறைவாளன் என உயர்வும் மகத்துவமிக்கோனுமாகிய அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருவர் வணக்கங்களில் ஏதாவது ஒன்றை செய்து அதனை அல்லாஹ்வுக்கும், அல்லாஹ் அல்லாதாருக்கும் நிகராக ஆக்கிவிட்டால் அந்த செயலை அவன் ஏற்றுக்கொள்ளாது விட்டு விடுவதோடு அந்தச்செயலை செய்தவனுக்கே திருப்பிவிடுகிறான். அல்லாஹ்வுக்காக மாத்திரம் என்ற தூய எண்ணத்துடன் அமல்களை செய்வது அவசியமாகும். ஏனென்றால் அல்லாஹ்வுக்கென்று தூய்மையாக செய்யப்படாத எந்த செயலையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்மாட்டான்.