பிரிவுகள்:
عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنين رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ:

مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَجْمِعًا قَطُّ ضَاحِكًا، حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ، إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6092]
المزيــد ...

உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், தமது சிறுநாக்குத் தென்படும் அளவு வாயைத் திறந்து பலமாக சிரித்ததை நான் கண்டதில்லை. மாறாக, புன்முறுவலாகவே சிரிப்பார்கள்.

[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 6092]

விளக்கம்

சிறுநாக்கு (தொண்டையின் மேற்பகுதியில் உள்ள சதைத் துண்டு) தென்படும் அளவு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அளவுகடந்து சிரிக்கமாட்டார்கள் எனவும், புன்முறுவலாகவே சிரிப்பார்கள் எனவும் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

الملاحظة
طيب ولكن شوي فيه بطأ حتى يفتح
النص المقترح لغة الأمهريه

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏதாவதொன்றைப் பொருந்திக்கொண்டாலோ, அல்லது அது அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினாலோ புன்முறுவலாகவே சிரிப்பார்கள்.
  2. இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : நபியவர்கள் பலமாக சிரிக்கமாட்டார்கள் என்பதன் அர்த்தம், முழுமையாக சிரிப்பிலேயே ஆழ்ந்து சிரிக்கமாட்டார்கள் என்பதாகும்.
  3. அதிகமாக சிரிப்பதும், வெடிச்சிரிப்பு போன்று சப்தத்தை உயர்த்துவதும் நல்லடியார்களின் பண்புகள் அல்ல.
  4. ஒரு மனிதனின் மிதமிஞ்சிய சிரிப்பு, தனது சகோதரர்களிடம் அவனுக்குள்ள மதிப்பு மற்றும் மரியாதையை இல்லாமலாக்கிவிடும்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (48)
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு