1. முகப்பு
  2. பிரிவுகள்
  3. சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

ஹதீஸ் முஃமினுக்காக- இறைவிசுவாசிக்காக சுவர்க்கத்தில் உள்ளிருந்து வெறுமையாக இருக்கும் ஒரு முத்திலான கூடாரமொன்று இருக்கும். அதன் நீளம் முப்பது மைல் தொலைவைக் கொண்டதாகும். அதிலே இறைநம்பிக்கையாளருக்கான துணைவியர் இருப்பர். அவர்களிடம் அவர் சென்று வருவார். ஆனால் அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது

عَنْ أَبِي مُوسَى رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«إِنَّ لِلْمُؤْمِنِ فِي الْجَنَّةِ لَخَيْمَةً مِنْ لُؤْلُؤَةٍ وَاحِدَةٍ مُجَوَّفَةٍ، طُولُهَا سِتُّونَ مِيلًا، لِلْمُؤْمِنِ فِيهَا أَهْلُونَ، يَطُوفُ عَلَيْهِمِ الْمُؤْمِنُ فَلَا يَرَى بَعْضُهُمْ بَعْضًا».

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
முஃமினுக்காக- இறைவிசுவாசிக்காக சுவர்க்கத்தில் உள்ளிருந்து வெறுமையாக இருக்கும் ஒரு முத்திலான கூடாரமொன்று இருக்கும். அதன் நீளம் முப்பது மைல் தொலைவைக் கொண்டதாகும். அதிலே இறைநம்பிக்கையாளருக்கான துணைவியர் இருப்பர். அவர்களிடம் அவர் சென்று வருவார். ஆனால் அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது.

சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் முஸ்லிம் - 2838

விளக்கம்

முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் சொர்க்கத்தின் சில இன்பங்கள் குறித்து குறிப்பிடுகிறார்கள்: சொர்க்கத்தில் ஒரு முஃமினுக்கு, மிகப் பிரமாண்டமானதும் விசாலமுமான ஒரு பெரிய கூடாரம் இருக்கும். அது துளையிடப்பட்ட ஒரு காலியான முத்தினால் உருவாக்கப்பட்டிருக்கும். அதன் அகலமும் நீளமும் வானில் அறுபது மைல் அளவு இருக்கும். அந்த கூடாரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், திசையிலும், நான்கு மூலைகளிலும் மனைவிகள் இருப்பார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் காணமாட்டார்கள். அந்த முஃமின் அவர்களிடையே சென்று வருவார்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. சொர்க்கவாசிகளுக்காக அல்லாஹ் தயார் செய்திருக்கும் இன்பங்கள் மிகப் பெரியதும் பிரமாண்டமானதுமாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.
  2. அல்லாஹ் அவர்களுக்காகத் தயார் செய்திருக்கும் மகத்தான இன்பங்களை தெளிவு படுத்துவதன் மூலம் நற்காரியங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வமூட்டுதல்.

மொழிபெயர்ப்பைக் காண

45 மொழி
EN English ஆங்கில மொழிபெயர்ப்பு
UR اردو உருது
ES Español ஸ்பானிய மொழி
ID Indonesia இந்தோனேஷியன்
BN বাংলা வங்காள மொழி
TR Türkçe துருக்கிய மொழி
RU Русский ரஷியன்
BS Bosanski போஸ்னியன்
SI සිංහල சிங்கள மொழி
HI हिन्दी ஹிந்தி மொழி
ZH 中文 சீன மொழி
FA فارسی பாரசீக மொழி
VI Tiếng Việt வியட்நாம் மொழி
TL Tagalog தகாலூக்
KU Kurdî குர்தி
HA Hausa ஹவுஸா
PT Português போர்த்துகீசியம்
ML മലയാളം மலயாளம்
TE తెలుగు தெலுங்கு
SW Kiswahili ஸ்வாஹிலி
MY မြန်မာ பர்மா
TH ไทย தாய்லாந்து
DE Deutsch ஜெர்மன்
PS پښتو بشتو
AS অসমীয়া Осомӣ
SQ Shqip Албанӣ
SV Svenska السويدية
AM አማርኛ الأمهرية
NL Nederlands الهولندية
GU ગુજરાતી الغوجاراتية
NE नेपाली النيبالية
PRS دری الدرية
SR Српски الصربية
RO Română الرومانية
HU Magyar المجرية
MOS Moore الموري
MG Malagasy Малагашӣ
KN ಕನ್ನಡ Канада
WO Wolof الولوف
UK Українська الأوكرانية
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية