பிரிவுகள்:
+ -
عن معاوية رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول:

«مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ، وَاللهُ يُعْطِي، وَلَنْ تَزَالَ هَذِهِ الْأُمَّةُ قَائِمَةً عَلَى أَمْرِ اللهِ، لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللهِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 71]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
'அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவைக் கொடுக்கின்றான் அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை பகிர்ந்தளிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது'

الملاحظة
ماهي الملاحظه
النص المقترح الجواب ؟ماذا

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 71]

விளக்கம்

அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் நபியவர்கள் அல்லாஹ் அவருக்கு அளித்துள்ள அறிவு மற்றும் ஆகாரம் போன்றவற்றை பகிர்ந்தளிப்பவராக உள்ளார். உண்மையில் அல்லாஹ்வே வழங்குபவன். அவனைத் தவிர உள்ள மற்றோர் இவற்றிற்கான காரணங்களாக உள்ளனர். அவனின் அனுமதியின்றி எவ்வித பயனையும் அவை தரமாட்டாது. இந்தச் சமுதாயத்தினர் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணி நடப்பதில் உறுதியாக இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது.

الملاحظة
اردو
النص المقترح اردو

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மார்க்க அறிவின் சிறப்பும் மகிமையும் குறிப்பிடப் பட்டுள்ளதுடன் அதனைக் கற்பதற்கும் ஆர்வமூட்டப் பட்டிருத்தல்.
  2. இந்த சமூகத்தின் இருப்புக்கு சத்தியத்தை பின்பற்றி அதனைப் பிரச்சாரம் செய்தல் இன்றியமையாத அம்சமாகும். ஒரு பிரிவினர் இப்பணியை கைவிட்டாலும் இன்னொரு தரப்பினர் மேற்கொள்ளல் வேண்டும்.
  3. மார்க்கத்தைக் கற்று தெளிவுபெறுதல் அல்லாஹ் தனது அடியாருக்கு நலவை நாடுவதற்கான ஒரு விடயமாக காணப்படுகிறது.
  4. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரமும் அவனின் நாட்டப்படியும் தனக்கு வழங்கப்பட்டதை கொடுப்பவர்களாக இருப்பாரகள். ஆனால் அவர்கள் எதனையும் சொந்தமாகப் பெற்றவராக இல்லை.
الملاحظة
في الحديث دليل على عظمة التفقه في الدين والحث عليه.
اردو
النص المقترح اردو
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية الطاجيكية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ الفولانية Итолёвӣ Урумӣ Канада الولوف البلغارية Озарӣ الأوكرانية الجورجية المقدونية
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு