«إذا قُلْتَ لِصَاحِبِكَ: أَنْصِتْ، يومَ الجمعةِ، والْإِمامُ يَخْطُبُ، فَقَدْ لَغَوْتَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 851]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகி றார்கள் :
'வெள்ளிக்கிழமை தினத்தில் இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ 'மௌனமாக இரு' என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்'. (ஜும்ஆவின் பலனை இழந்துவிட்டாய்).
ஜும்ஆவிற்கு சமூகமளித்தவர் அவசியம் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்கொன்றை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது கதீப் அவர்கள் உரையாற்றுகையில் அவரின் போதனைகளை, அறிவுறைகளை சிந்தித்துணர்வதற்காக காது தாழ்த்தி மௌனமாக கேட்பது அவ்வொழுங்குகளின் முக்கியமான ஒன்றாகும். இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கையில் பிறரைப் பார்த்து 'செவிமடுப்பீராக' 'மௌனமாக இருப்பீராக' என ஆகக் குறைந்தளவிலான வார்த்தைகளினால் பேசினாலும் அவர் ஜும்ஆவின் சிறப்பை இழந்துவிட்டவராவார் என விபரித்துள்ளார்கள்.