عَن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«الْحَلِفُ مَنْفَقَةٌ لِلسِّلْعَةِ، مَمْحَقَةٌ لِلرِّبْحِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1606]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
"(பொய்) சத்தியம் செய்வது, பொருளை விலைபோகச் செய்யும்; இலாபத்தில் கிடைக்கும் பரக்கத்தை அழித்துவிடும்".
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [முஸ்லிம் - 1606]
நபி ﷺ அவர்கள், வியாபார நடவடிக்கைகளில் விற்றல் வாங்கலின் போது ஒருவர் உண்மையையே சொன்னாலும்—சத்தியம் செய்வதையும், அதனை அதிகமாக செய்வதையும் எச்சரித்தார்கள். சத்தியம் செய்வதால் பொருள் விற்பனை அதிகரித்து சந்தையில் குறித்த பொருளுக்கு கிராக்கி ஏற்படலாம். ஆனால் அது இலாபம் மற்றும் வருமானத்தில் உள்ள பரகத்தை (அருள்வளத்ததை) குறைத்து, அழித்துவிடும். மேலும் அல்லாஹ், அவனது செல்வம் அழிவதற்கான பல வழிகளை ஏற்படுத்தக் கூடும்—திருட்டு, தீவிபத்து, மூழ்குதல், பறிமுதல், கொள்ளை அல்லது பிற காரணங்களால் அவனது சொத்து நஷ்டமடையலாம்.