أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ ذَاتَ يَوْمٍ عَلَى المِنْبَرِ وَجَلَسْنَا حَوْلَهُ، فَقَالَ: «إِنِّي مِمَّا أَخَافُ عَلَيْكُمْ مِنْ بَعْدِي، مَا يُفْتَحُ عَلَيْكُمْ مِنْ زَهْرَةِ الدُّنْيَا وَزِينَتِهَا» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَوَيَأْتِي الخَيْرُ بِالشَّرِّ؟ فَسَكَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقِيلَ لَهُ: مَا شَأْنُكَ؟ تُكَلِّمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ يُكَلِّمُكَ؟ فَرَأَيْنَا أَنَّهُ يُنْزَلُ عَلَيْهِ؟ قَالَ: فَمَسَحَ عَنْهُ الرُّحَضَاءَ، فَقَالَ: «أَيْنَ السَّائِلُ؟» وَكَأَنَّهُ حَمِدَهُ، فَقَالَ: «إِنَّهُ لاَ يَأْتِي الخَيْرُ بِالشَّرِّ، وَإِنَّ مِمَّا يُنْبِتُ الرَّبِيعُ يَقْتُلُ أَوْ يُلِمُّ، إِلَّا آكِلَةَ الخَضْرَاءِ، أَكَلَتْ حَتَّى إِذَا امْتَدَّتْ خَاصِرَتَاهَا اسْتَقْبَلَتْ عَيْنَ الشَّمْسِ، فَثَلَطَتْ وَبَالَتْ، وَرَتَعَتْ، وَإِنَّ هَذَا المَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَنِعْمَ صَاحِبُ المُسْلِمِ مَا أَعْطَى مِنْهُ المِسْكِينَ وَاليَتِيمَ وَابْنَ السَّبِيلِ - أَوْ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَإِنَّهُ مَنْ يَأْخُذُهُ بِغَيْرِ حَقِّهِ، كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، وَيَكُونُ شَهِيدًا عَلَيْهِ يَوْمَ القِيَامَةِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1465]
المزيــد ...
அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போது அவர்கள், “எனக்குப் பின் உங்களுக்கிடையே உலக வளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்துவிடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்” எனக் கூறினார்கள். ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?” எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது அந்த மனிதரிடம், “உமது நிலைமை என்ன? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால், நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!” எனக் கேட்கப்பட்டது.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்து விட்டு, “கேள்வி கேட்டவர் எங்கே?” என அவரைப் பாராட்டுவதைப் போன்று கேட்டார்கள்.
பிறகு, “நன்மையானது தீமையை உருவாக்காதுதான்; வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை, வயிறு புடைக்கத் தின்ன வைத்துக்) கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன; பச்சைப் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை; ஏனெனில்) அது (பச்சைப் புற்களைத்) தின்று வயிறு நிரம்பி விடும்போது சூரியனை நேராக நோக்கி(ப் படுத்துக் கொண்டு அசைபோடுகின்றது) சாணமிட்டு சிறுநீரும் கழிக்கின்றது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் சென்று) மேய்கிறது. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை, அது அவருக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக்கொள்கிறாரோ - அவர் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவர் ஆவார். மேலும், மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக அமையும்” எனக் கூறினார்கள்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 1465]
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பர் மீது அமர்ந்து தனது தோழர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது, இவ்வாறு கூறினார்கள் :
எனக்குப் பின்னர் நான் உங்களிடம் அதிகம் பயப்படுவது என்னவென்றால், இப்பூமியின் செல்வ வளங்களும், அலங்காரங்களும், கவர்ச்சிகளும் மற்றும் அவற்றில் உள்ள இன்பங்கள், பயிர்கள், ஆடைகள் என, நிலையற்றதாக இருப்பினும் மக்கள் பெருமைக்காகத் தேடும் அம்சங்கள் உங்களுக்குத் திறந்து கொடுக்கப்படுவதே!
அப்போது ஒரு மனிதர், 'உலக அலங்காரங்கள் அல்லாஹ்வின் ஓர் அருட்கொடையாக இருக்கும் போது, அவ்வருட்கொடை சோதனையாகவும், தண்டனையாகவும் மாற்றம் பெறுமா?' எனக் கேட்டார்.
நபியவர்கள் மௌனித்ததைக் கண்ட நபித் தோழர்கள், அம்மனிதர் நபியவர்களைக் கோபத்திற்குள்ளாக்கியதாக நினைத்து அவரைக் கண்டித்தனர்.
எனினும், நபியவர்களுக்கு வஹி இறங்கிக் கொண்டிருந்தது என்பது பின்பு தெளிவானது. நபியவர்கள் தமது நெற்றியில் இருந்து வியர்வையைத் துடைத்துக்கொண்டு, 'கேள்வி கேட்டவர் எங்கே?' எனக் கேட்டார்கள்.
அதற்கவர், 'நான்' என்று கூறினார்.
நபியவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, பின்பு இவ்வாறு கூறினார்கள்: உண்மையான நன்மைகள் நன்மையையே கொண்டுவரும். ஆனாலும், இந்த அலங்காரங்கள், முழுமையான நன்மை அல்ல. ஏனெனில், அவை குழப்பங்கள், போட்டி, மறுமையை விட்டும் திசை திருப்பல் ஆகிய கெடுதிகளை ஏற்படுத்துகின்றன. பின்பு அதற்கு ஓர் உதாரணமாக இவ்வாறு கூறினார்கள்: வசந்த காலத்தில் வளரும் பசுமையான சில பயிர்கள், கால்நடைகளுக்கு விருப்பமாக இருந்தாலும், அவை வயிற்றை நிரம்பச் செய்து, கொன்று விடுகின்றன. அல்லது இறப்புக்கு அருகாமையில் விட்டுவிடுகின்றன. ஆனால், பச்சைப் புற்களை சாப்பிடும் மிருகம், வயிற்றின் இரு ஓரங்களும் நிரம்பும் வரை சாப்பிட்டுவிட்டு, சூரியனை முன்னோக்கி, விட்டைகளை விட்டு விட்டோ, சிறுநீர் கழித்துவிட்டோ இருக்கும். பின்பு, தன் வயிற்றில் இருப்பவற்றை மீண்டும் அசை போட்டு, சப்பி விழுங்கிவிடும். அதன் பின்னர் மீண்டும் சாப்பிடும்.
எனவே, இந்தச் சொத்துக்கள் பசுமையான, இனிமையான பச்சை நிறத் தாவரங்களைப் போன்றவை. அதிகப் படுத்திக் கொள்வது ஒன்றில் கொன்று விடும். அல்லது மரணத்திற்கு அருகாமையில் விட்டுவிடும். ஆனால், தேவையான, போதுமான அளவு உணவை ஹலாலான விதத்தில் எடுத்துக் கொண்டவர்களைத் தவிர, அது பாதிப்பை ஏற்படுத்த மாட்டாது. சிறந்த முஸ்லிம் ஒரு முஸ்லிம் அதிலிருந்து ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது சிறந்த சொத்தாகும். தகுதியான அளவு எடுப்பவருக்கு அதில் பரக்கத் செய்துகொடுக்கப்படும். தகுதியற்ற விதத்தில் எடுப்பவர், வயிறு நிரம்பாமல் சாப்பிட்டுக் கொண்டிருப்பவரைப் போன்றவராவார். மறுமையில் அது அவருக்கு எதிரான சாட்சியாக இருக்கும்.
قال السندي: فلا بد في الخبر من أمرين، أحدهما: تحصيله بوجهه، والثاني: صرفه في مصارفه، وعند انتفاء أحدهما يصير ضررًا... وقد يقال: فيه إشارة إلى الملازمة بين القَيْدَين؛ فلا يوفَّق المرء للصرف في المصارف إلا إذا أخذه بوجهه.قال السندي: فلا بد في الخبر من أمرين