عن ابْنِ عُمَرَ رَضيَ اللهُ عنهُما قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَيُّمَا امْرِئٍ قَالَ لِأَخِيهِ: يَا كَافِرُ، فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا، إِنْ كَانَ كَمَا قَالَ، وَإِلَّا رَجَعَتْ عَلَيْهِ».

[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 60]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :
யாராவது ஒரு மனிதர் தனது சகோதரனைப் பார்த்து, 'காபிரே!' (நிராகரிப்பாளனே!) என்று கூறினால், அவ்விருவரில் ஒருவருக்கு அது கிடைக்கவே செய்யும். அம்மனிதன் அவர் கூறியது போன்றே இருந்தால், அது அவரைச் சேரும். அவ்வாறில்லாவிட்டால், கூறியவரை நோக்கி அது மீண்டுவிடும்.

[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم - 60]

விளக்கம்

ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமைப் பார்த்து 'காபிரே!' என்று கூறினால், அந்த வார்த்தைக்கு அவர்களில் ஒருவர் தகுதியாகிவிடுவார். அம்மனிதன் அவர் கூறியதுபோன்றே இருந்தால், அது அவரைச் சேரும். அவ்வாறில்லாவிட்டால், கூறியவரை நோக்கி 'காபிர்' என்று அவர் கூறிய வார்த்தை மீண்டுவிடும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமைப் பார்த்து, அவனிடமில்லாத நிகாரிப்பு, பெரும்பாவங்கள் போன்ற பண்புகளைக் கொண்டு அழைப்பதை எச்சரித்தல்.
  2. இந்த கெட்டவார்த்தையை விட்டும் எச்சரித்தல், அவ்வாறு கூறுபவர் மிகப் பாரதூரமான ஆபத்தில் உள்ளார் என்பதை உணர்த்துதல். எனவே, நாவைப் பாதுகாத்துக் கொள்வதும், தெளிவான அறிவுடனேயே மாத்திரம் பேசுவதும் கட்டாயமாகும்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு இந்தோனேஷியன் வங்காள மொழி மேலதிக விபரங்களுக்கு (38)
மேலதிக விபரங்களுக்கு