உப பிரிவுகள்

ஹதீஸ் அட்டவணை

1. நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
2. எவன் தன் பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவருமோ வயோதிபம் அடைந்திருக்கும் நிலையில் அவர்களை அவன் அடையப் பெற்றும் சுவர்க்கம் செல்லவில்லையோ அவன் அழிந்து போகட்டும்.அவன் அழிந்து போகட்டும்.அவன் அழிந்து போகட்டும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
3. நீங்கள் அதிகமாக ஸுஜூத் செய்யுங்கள்.ஏனெனில் நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செய்யும் ஒவ்வொரு ஸுஜூதின் மூலமும் அல்லாஹ் உங்களின் ஒரு அந்தஸ்தைக் கூட்டாமலும்,அதன் மூலம் உங்களின் ஒரு தவறை அழித்து விடாமலும் இருப்பதில்லை.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
4. யாரிடம் மென்மை இல்லையோ அவர் அதன் நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுவார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
5. நீங்கள் உண்மையைக் கடைப்பிடியுங்கள்.ஏனென்றால்,நிச்சயமாக உண்மை நன்மைக்கு வழி காட்டும்.மேலும் நிச்சயமாக நன்மை சுவர்க்கத்திற்கு வழிகாட்டும் - 2 ملاحظة
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
6. "நிச்சயமாக மார்க்கம் இலகுவானது.மார்க்கம் அழிந்த போகாது.ஆனால் அது மிகைப்படுத்தப் பட்டாலேயன்றி.எனவே அதனை நடு நிலையாகவும்.மிகைப் படுத்தாமலும் செய்து வாருங்கள்.மேலும் மகிழ்ச்சியாக இருங்கள்.இன்னும் நல்லமல் மூலம் காலையிலும்,மாலையிலும்,இரவின் ஒரு பகுதியலும் உதவி தேடுங்கள்"என்றும்,"கருமத்தை நடு நிலையாகச் செய்யுங்கள்.மிகைப் படுத்தாதீர்கள்.காலையிலும்,மாலையிலும்,இன்னும் இரவின் ஒரு பகுதியிலும் அதனை நடு நிலையாகச் செய்யுங்கள்"என்றும் ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
7. ஒருவர் சத்தியம் செய்யும் போது தன் சத்தியத்தில் 'லாத், உஸ்ஸாவின் மீது சத்தியமாக' என்று கூறினால் அவர் 'லாஇலாஹ இல்லல்லாஹ் ' என்று கூறட்டும். ஒருவர் தன் தோழரிடம் வா உன்னுடன் சூதாட்டம் விளையாடுகிறேன் என்று கூறினால் அவர் (இப்படிக் கூறியதற்காக) தானதர்மம் செய்யட்டும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது