பிரிவுகள்: . . .
+ -
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِنَّ الدِّينَ يُسْرٌ، وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلَّا غَلَبَهُ، فَسَدِّدُوا وَقَارِبُوا، وَأَبْشِرُوا، وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوْحَةِ وَشَيْءٍ مِنَ الدُّلْجَةِ».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 39]
المزيــد ...

"நிச்சயமாக மார்க்கம் இலகுவானது.மார்க்கம் அழிந்த போகாது.ஆனால் அது மிகைப்படுத்தப் பட்டாலேயன்றி.எனவே அதனை நடு நிலையாகவும்.மிகைப் படுத்தாமலும் செய்து வாருங்கள்.மகிழ்ச்சியாக இருங்கள்.இன்னும் நல்லமல் மூலம் காலையிலும்,மாலையிலும்,இரவின் ஒரு பகுதியலும் உதவி தேடுங்கள்"என்று"ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.இதனை இமாம் புஹாரீ அவர்கள் அறிவித்துள்ளார்கள்.மேலும் இன்னொரு அறிவிப்பில் "கருமத்தை நடு நிலையாகச் செய்யுங்கள்.மிகைப் படுத்தாதீர்கள்.காலையிலும்,மாலையிலும்,இன்னும் இரவின் ஒரு பகுதியிலும் அதனை நடு நிலையாகச் செய்யுங்கள்"என்று பதிவாகியுள்ளது.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

விளக்கம்

ஹதீஸ் விளக்கம்: எவரும் மார்க்க விடயத்தில் நலின போக்கை விட்டு விட்டுஅதன் காரியங்களில் ஆழமாக மூழ்கி விடலாகாது அப்படிச் செய்தால் அவர் பலவீனமடைவார்.அப்பொழுது அவரின் செயல் அனைத்துமோ அல்லது அதில் சிலதோ அறுந்து போய்விடும்.எனவே எல்லா அமலையும் உங்களால் பூரணமாக செய்ய முடிய வில்லையாயினும்,அதில் நடு நிலைப் போக்கைக் கடைப் பிடியுங்கள்.மேலும் நீங்கள் எப்பொழுதும் செய்து வரும் நற் கருமங்கள் சொற்பமாயினும் அதற்கு நற் கூலி கிடைக்கும்,இதையிட்டு நீங்கள் மகிழ்ச்சியடையுங்கள்.மேலும் இபாதத்துக்களை மேற்கொள்வதற்கு உங்களின் ஓய்வு நேரங்களையும்,உங்களுக்குச் சுறுசுறுப்பான சந்தர்ப்பங்களையும் உதவியாக எடுத்துக் கொள்ளுங்கள்,என்பது இந் நபி மொழி தரும் விளக்கமாகும்.மேலும் لن يشاد الدين என்பதைத் தோன்றா எழுவாய் வினையாக வைத்து "மார்க்கம் அழிக்கப்பட மாட்டாது"என்றும்,தோன்றும் எழுவாய் வினையாக வைத்து " மார்க்கத்தை ஒருவரும் அழித்துவிட முடியாது என்றும் பொருள் கொள்ளத் தக்கவாறு الدٌِيْنُ என்று "ழம்மா" குறியீடு வைத்தும்,الدٌِيْنَ என்று "பத்ஹா" குறியீடு வைத்தும் வாசிக்கலாம் என இமாம் நவவீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ السويدية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية الليتوانية الصربية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Канада الأوكرانية الجورجية المقدونية
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
  • . .
மேலதிக விபரங்களுக்கு