பிரிவுகள்:
+ -
عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيُّ قَالَ:

لَقِيتُ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: أَخْبِرْنِي بِعَمَلٍ أَعْمَلُهُ يُدْخِلُنِي اللهُ بِهِ الْجَنَّةَ؟ أَوْ قَالَ قُلْتُ: بِأَحَبِّ الْأَعْمَالِ إِلَى اللهِ، فَسَكَتَ. ثُمَّ سَأَلْتُهُ فَسَكَتَ. ثُمَّ سَأَلْتُهُ الثَّالِثَةَ فَقَالَ: سَأَلْتُ عَنْ ذَلِكَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «عَلَيْكَ بِكَثْرَةِ السُّجُودِ لِلَّهِ، فَإِنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً، إِلَّا رَفَعَكَ اللهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْكَ بِهَا خَطِيئَةً» قَالَ مَعْدَانُ: ثُمَّ لَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَسَأَلْتُهُ فَقَالَ لِي: مِثْلَ مَا قَالَ لِي: ثَوْبَانُ.
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 488]
المزيــد ...

"நீங்கள் அதிகமாக ஸுஜூத் செய்யுங்கள்.ஏனெனில் நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செய்யும் ஒவ்வொரு ஸுஜூதின் மூலமும் அல்லாஹ் உங்களின் ஒரு அந்தஸ்தைக் கூட்டாமலும்,அதன் மூலம் உங்களின் ஒரு தவறை அழித்து விடாமலும் இருப்பதில்லை."என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸௌபான் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

இந்த ஹதீஸின் காரணம் பற்றி மிஃதான் இப்னு தல்ஹா அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் "நான் ஸௌபானிடம் வந்து எந்த அமலின் மூலம் அல்லாஹ் என்னை சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானோ அப்படியான ஒரு அமலை அல்லது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான அமல் எதுவோ அதனை எனக்கு அறிவியுங்கள் என்றேன்.அப்பொழுது அவர் மௌணமாக இருந்தார்.எனவே திரும்பவும் அவரிடம் விசாரித்தேன்.அப்பொழுதும் அவர் மௌணமாக இருந்தார்.எனவே மூன்றாம் தடவையும் அவரிடம் வசாரித்தேன்.அப்பொழுதவர்,"இது பற்றி ரஸூல் (ஸல்) அவர்களிடம் நான் விசாரித்தேன்.அதற்கு அவர்கள் நீங்கள் அப்படிச் செய்யுங்கள் அதாவது அதிகமாக ஸுஜூது செய்யுங்கள் என்றார், எனக் கூறினார்" இவ்வாறு விவரித்த மிஃதான் அதன் இறுதியில் "பின்னர் நான் அபூ தர்தாவைச் சந்தித்தேன் அவரிடமும் அது பற்றி விசாரித்தேன்.அதற்கு அவர் என்னிடம் ஸௌபான் சொன்னது போலவே சொன்னார்" என்றார்.மேலும் ஸௌபான்(ரழி) அறிவித்த "நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செய்யும் ஒவ்வொரு ஸுஜூதின் மூலமும் அல்லாஹ் உங்களின் ஒரு அந்தஸ்தைக் கூட்டாமலும்,அதன் மூலம் உங்களின் ஒரு தவறை அழித்து விடாமலும் இருப்பதில்லை"எனும் நபி மொழி,"நான் உங்களுடன் சுவர்க்கத்தில் ஒன்றாக இருக்க உங்களை வேண்டுகிறேன்" என்று ரபீஆ இப்னு கஃப் அல் அஸ்லமீ அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது நபியவர்கள் "நீங்கள் அதிகமாக ஸுஜூது செய்து உங்கள் ஆத்மாவுக்கு உதவி செய்யுங்கள் என்று" கூறிய ஹதீஸைப் போன்றதாகும்.மேலும் "அடியான் அல்லாஹ்வுக்காகச் செய்யும் ஒவ்வொரு ஸுஜூதின் மூலமும், அல்லாஹ் அவனுக்கு ஒரு நன்மை எழுதாமலும்,அவனின் ஒரு தீமையை அழிக்காமலும்,அவனின் ஒரு அந்தஸ்தைக் கூட்டாமலும் இருப்பதில்லை" என்று சொல்வதை செவிமடுத்த உபாதா இப்னு அஸ்ஸாமித் (ரழி) அவர்கள் தோழர்களிடம்" நீங்கள் ஸுஜூத் செய்வதை அதிகப்படுத்துங்கள்" என்று கூறினார்கள்.மேலும் ஸுஜூது சிறந்தோர் வழிபாடும் அல்லாஹ்வை நெருங்குவதற்குரிய கீர்த்தி மிக்கதோர் அமலுமாகும்.ஏனெனில் இதில் அல்லாஹ்வுக்கு அடிபணிதலின் உச்ச கட்ட நிலை வெளிப்படுகின்றது.மேலும் மனிதனின் மேலான உருப்பாகிய முகம் நிலத்தில் வைத்துச் சவட்டப்பட்டு தாழ்தப்படுகின்றது.மேலும் இங்கு ஸுஜூத் என்று குறிப்பிடுவது தொழுகையுடன் செய்து வரும் ஸுஜூதையே அல்லாது பிரத்தியேகமாக தனியாகச் செய்யும் ஸுஜூதை அல்ல.ஏனெனில் ஸஜதா திலாவத்,ஸஜதா சுக்ர் போன்று காரணம் அறியப்பட்ட பிரத்தியேகமான ஸுஜூதுகளையன்றி தனி ஸுஜூத் செய்வதற்கு ஷரீஆவில் அனுமதியில்லை.மேலும் ஒரு ஸஜதாவின் மூலம் மனிதன் இரண்டு பயன்களை அடைகின்றான் என்பதை ரஸூல் (ஸல்) அவர்கள் இதன் மூலம் எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்.ஒன்று அல்லாஹ்வின் இடத்தில் அவனின் ஒரு அந்தஸ்த்து உயர்த்தப்படுவதுடன்,மக்கள் உள்ளத்திலும் அவனின் மரியாதை அதிகரிக்கின்றது.இரண்டாவது பயன் யாதெனில் அதன் மூலம் அவனின் ஒரு குற்றம் அழிக்கப்படுகின்றது.என்பதாகும் இவ்வாறு மனிதனின் குற்றம் குறைகள் நீக்கப்பட்டு,அவனிடம்,கட்டாயம் இருக்க வேண்டிய விடயங்கள் வந்தடையும் போது அவன் பரிபூரணத் தன்மையை அடைவான்.அப்பொழுது மனிதர்கள் அவனை நேசிக்கும்படியான உயர்ந்த அந்தஸ்த்திற்கு அவன் உயர்த்தப்படுவான்.எனவே இவ்வாறு அவனின் பதவி உயர்த்தப்பட்டு,அவனின் குற்றம் குறைகளும் அழிந்து போகும் பட்சத்தில் அவன் தன் குறிக்கோலை அடைந்து கொண்ட வனாகவும்,தனக்குள்ள அச்சுறுத்தல்களை விட்டும் ஈடேற்றம் பெற்றவனாகவும் ஆகிவிடுவான்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ السويدية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية المقدونية
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு