«مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ: وَاللَّاتِ وَالعُزَّى، فَلْيَقُلْ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَمَنْ قَالَ لِصَاحِبِهِ: تَعَالَ أُقَامِرْكَ، فَلْيَتَصَدَّقْ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 4860]
المزيــد ...
அபூ ஹூரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள். ஒருவர் சத்தியம் செய்யும் போது 'லாத் உஸ்ஸாவின் மீது சத்தியமாக' என்று கூறினால் அவர் 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்று கூறட்டும். ஒருவர் தன் தோழரிடம் வா உன்னுடன் சூதாட்டம் விளையாடுகிறேன், என்று கூறினால் அவர் (இப்படிக் கூறியதற்காக) தானதர்மம் செய்யட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் அல்லாத லாத், உஸ்ஸா மற்றும் அவை அல்லாத கடவுளாக கருதப்படக்கூடிய வற்றில் சத்தியம் செய்பவர், 'லாஇலாஹ இல்லல்லாஹ்' எனக் கூற வேண்டும் எனவும், தனது நண்பரிடம் உன்னுடன் இந்தந்த விடயங்களில் பந்தயத்தில் (சூதாட்டத்தில்) ஈடுபடுகிறேன் எனக் கூறினால் அவர் தானதர்மம் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிட்டார்கள்.