عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَيُحِبُّ أَحَدُكُمْ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ أَنْ يَجِدَ فِيهِ ثَلَاثَ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ؟» قُلْنَا: نَعَمْ. قَالَ: «فَثَلَاثُ آيَاتٍ يَقْرَأُ بِهِنَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثِ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 802]
المزيــد ...
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் எவரேனும் பெரிய, பருமனான, கர்ப்பிணியாக இருக்கும் மூன்று ஒட்டகங்களை தனது குடும்பத்தாரிடம் திரும்பி வரும்போது பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? என நபியவர்கள் கேட்டபோது நாங்கள்: 'ஆம்' என்றோம். அப்போது அவர்கள் 'உங்களில் ஒருவர் தனது தொழுகையில் ஓதும் மூன்று வசனங்கள் அவருக்கு மூன்று பெரிய, கொழுத்த, கர்ப்பிணி ஒட்டகங்களை விட சிறந்தவை.' எனக் கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 802]
நபியவர்கள் இந்த ஹதீஸில் தொழுகையில் மூன்று வசனங்களை ஓதுவதற்குரிய கூலி ஒரு மனிதர் தனது வீட்டில் மூன்று பெரிய மற்றும் கொழுத்த கர்ப்பிணி ஒட்டகங்கள் இருப்பதை விட சிறந்தது என தெளிவுபடுத்துகிறார்கள்.