عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ:
فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، عَلَى العَبْدِ وَالحُرِّ، وَالذَّكَرِ وَالأُنْثَى، وَالصَّغِيرِ وَالكَبِيرِ مِنَ المُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1503]
المزيــد ...
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் :
(முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் ஆகிய அனைவருக்காகவும் ஒரு 'ஸாஉ' அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு 'ஸாஉ' அளவு தொலி நீக்கப்படாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்பே கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்).
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 1503]
நபி (ஸல்) அவர்கள் ரமழான் முடிந்த உடனேயே ஸகாத் அல்-பித்ர் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அதன் அளவு ஒரு ஸாஉ ஆகும் (சுமார் 2.75 கிலோகிராம்)', இது நான்கு 'முத்துகளின் எடைக்கு நிகராகும். ஒரு முத்து என்பது ஒரு சராசரி நபரின் இரண்டு கைப்பிடி (பேரிச்சம்பழம் அல்லது பார்லி) அளவு ஆகும். ஸகாத்துல் பித்ர் முஸ்லிம்களில் - சுதந்திரமானவர் அடிமை, ஆண் அல்லது பெண், சிறியோர் அல்லது பெரியோர் என்ற வித்தியாசமுமின்றி அனைவர் மீதும் கடமையாகும். தனது சொந்த தேவைகளை விட அதிகமாகவும், தனது குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை விட அதிகமாகவும் வைத்திருக்கும் அனைவர் மீதும் கடமையாகும். நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்பு ஸகாத் அல்-பித்ரை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார்கள்.