«مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 38]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
"இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமழானில் நோன்பு நோற்றவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்".
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 38]
அல்லாஹ்வை விசுவாசித்து, நோன்பு கட்டாயக் கடமையென்பதையும், அதனை நோற்கும் நோன்பாளிகளுக்கு தயார்செய்து வைத்துள்ள கூலிகள் மற்றும் வெகுமதிகளையும் உண்மைப்படுத்தி அவனது வாக்குறுதியை உண்மைப்படுத்தி, அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி முகஸ்துதி இன்றி அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்றவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவத்துள்ளார்கள்.