«إِذَا سَجَدْتَ، فَضَعْ كَفَّيْكَ وَارْفَعْ مِرْفَقَيْكَ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 494]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அல் பரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
நீ ஸுஜூது செய்தால் உனது இரு உள்ளங்கைகளையும் நிலத்தில் வைக்கவும். முழங்கைகளை உயர்த்திக் கொள்ளவும்.
[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 494]
தொழுகையில் ஸுஜூதில் இரு கைகளும் எவ்வாறு இருக்க வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள். அதாவது தனது இரு உள்ளங்கைகளையும், விரல்கள் கிப்லாவை முன்னோக்கி, சேர்க்கப்பட்ட வண்ணம் நிலத்தில் பட வைத்தல். இரு முழங்கைகளையும் நிலத்தை விட்டு உயர்த்தி விலாம்புறங்களில் இருந்து விலக்கி வைத்தல்.