عَن أَبي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لاَ يُشِيرُ أَحَدُكُمْ عَلَى أَخِيهِ بِالسِّلاَحِ، فَإِنَّهُ لاَ يَدْرِي، لَعَلَّ الشَّيْطَانَ يَنْزِعُ فِي يَدِهِ، فَيَقَعُ فِي حُفْرَةٍ مِنَ النَّارِ».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 7072]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக, அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:
உங்களில் ஒருவர் தனது சகோதரனை நோக்கி ஆயுதத்தினால் சைக்கினை காட்டவேண்டாம். ஏனெனில், அவர் அறியாமலேயே ஷைத்தான் அவரது கையைத் உசுப்பிவிட, அவர் நரகப் படுகுழியில் போய் விழலாம்.

[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 7072]

விளக்கம்

இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை நோக்கி எவ்விதமான ஆயுதத்தையும் கொண்டு சைக்கினை செய்வதை எச்சரிக்கின்றார்கள். ஏனெனில், அவன் அறியாமலேயே, ஷைத்தான் அவனது கையில் ஆயுதத்தை உசுப்பத் தூண்டிவிட, அவன் தனது சகோதரனைக் கொலைசெய்யவோ அல்லது துன்புறுத்தவோ செய்யலாம். விளைவாக, நரகப் படுகுழியில் அவனைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பாவத்தில் அவன் வீழ்ந்துவிடலாம்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. முஸ்லிமின் உயிரின் புனிதத்தைத் தெளிவுபடுத்தல்.
  2. ஒரு முஸ்லிமை மதிப்பதன் அவசியம். மேலும், செயலாலோ, வார்த்தையாலோ, அவருக்கு தீமையிழைப்பதை எச்சரிக்கையாக இருத்தல். கூரிய ஒன்றைக் கொண்டோ, ஓர் ஆயுதத்தைக் கொண்டோ அவரை நோக்கி, பரிகாசத்திற்காக இருப்பினும், சைக்கினைசெய்து காட்டுவது அவ்வாறான ஒரு செயலாகும். ஏனெனில், சைத்தான் அவனது கையை உசுப்பிவிட்டு, சகோதரனைத் தாக்குவதை அழகுபடுத்திக் காட்டி விடுவான். அல்லது அவனது கையில் இருந்து ஆயுதத்தைப் பறிக்க, அது அவனது சுயதேர்வின்றி விழுந்து அவனது சகோதரனைப் பாதிக்கலாம்.
  3. தடுக்கப்பட்டவற்றில் கொண்டு போய்ச் சேர்க்கும் அம்சங்களைத் தடுப்பதன் மூலம், பாவங்களுக்கான வழிவகைகளையும் தடுத்துள்ளமை.
  4. சமூகப் பாதுகாப்பு விடயத்தில் அக்கறை காட்டல். மேலும், மக்களுக்கிடையிலான உறவைப் பாதுகாத்தல், சைக்கினை மற்றும் அச்சுறுத்தல்கள் கொண்டு அவர்களைப் பயத்திற்கு உள்ளாக்காமல் இருத்தல்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு இந்தோனேஷியன் வங்காள மொழி மேலதிக விபரங்களுக்கு (35)