عَن ابنِ عباسٍ رضي الله عنهما أنَّ رسولَ اللهِ صلي الله عليه وسلم قال:
«لَو يُعطَى النّاسُ بدَعواهُم لادَّعَى رِجالٌ أموالَ قَومٍ ودِماءَهُم، ولَكِنَّ البَيِّنَةَ على المُدَّعِى، واليَمينَ على مَن أنكَرَ».
[صحيح] - [رواه البيهقي] - [السنن الكبرى للبيهقي: 21243]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் :
' (பிரதிவாதியை விசாரிக்காமல் ) மக்களின் வாதத்திறமையின் அடிப்படையில் அவர்கள் கோருவதெல்லாம் வழங்கப்பட்டால், மக்களில் பலர்; ஏனைய மனிதர்களின் உயிர்க்ளுக்கும் உடமைகளுக்கு உரிமை கோரத் தொடங்குவார்கள். எனவே உரிமை கொண்டாடும் வாதி அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும், அதனை மறுப்பவர் -பிரதிவாதி- சத்தியம் செய்ய வேண்டும்.'
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை அல்பைஹகீ அறிவத்திருக்காறார்] - [السنن الكبرى للبيهقي - 21243]
எவ்வித ஆதாரமோ, தகுந்த சாட்சியங்களோ இல்லாது தங்களது வாதத்தின் அடிப்படையில் வழக்காடும் ஒருவருக்கு அவரால் கோரப்படுபவை வழங்கப்படும் என்றிருந்தால் சிலர் மக்களின் உடமைகளையும், அவர்களின் உயிரையும் கூட உரிமை கோரத் தொடங்குவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஆகவே, வாதி தனது கூற்றுக்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். அவரிடம் ஆதாரம் இல்லையென்றால், அந்தக் கோரிக்கை பிரதிவாதியின் முன் வைக்கப்படும். அவர் மறுத்தால், அவர் சத்தியம் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.