عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى ابْنِ أَزْهَرَ، قَالَ:
شَهِدْتُ العِيدَ مَعَ عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: هَذَانِ يَوْمَانِ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صِيَامِهِمَا: يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ، وَاليَوْمُ الآخَرُ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1990]
المزيــد ...
இப்னு அஸ்ஹரின் அடிமையான அபூ உபைத் கூறுகறார் :
நான் ஒரு பெருநாளில் உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஒன்று, உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) ஆகும்; மற்றொன்று, உங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சியை நீங்கள் உண்ணும் (ஹஜ்ஜு) பெருநாள் ஆகும்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 1990]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நோன்பு மற்றும்; ஹஜ்ஜுப் பொருநாள் தினங்களில் நோன்பு நோற்பதை தடைசெய்தார்கள். (அதாவது நபி (ஸல்) அவர்கள், ஷவ்வால் மாதத்தின் 1 ஆம் நாள் மற்றும் துல்-ஹிஜ்ஜா மாதத்தின் 10 ஆம் நாள் ஆகிய நாட்களில் நோன்பு நோற்பதைத் தடை செய்தார்கள்.) ரமழான் நோன்பு முடிவடையும் நாள் ஈதுல் பித்ர் ஆகும். பலியிடப்பட்ட விலங்குகளை உண்ணும் நாள் ஈத்-அல்ஹா ஆகும்.