عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللهِ بَاعَدَ اللهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1153]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூ ஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
“இறைவழியில் (அறப்போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை, அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான்.”
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [முஸ்லிம் - 1153]
'யார் அல்லாஹ்வின் திருப்தியை நாடியும், அவனுடைய கூலியை எதிர்பார்த்தும் ஜிஹாதின் போது ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அல்லது ஜிஹாத் அல்லாத நிலையிலும் நோன்பு நோற்கிறரோ அல்லாஹ் தனது அருளின் மூலம், அவருக்கும் நரகத்திற்கும் இடையிலான எழுபது வருட தூரத்தை நீக்குகிறான்.' என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள்.