«مَنْ نَسِيَ وَهُوَ صَائِمٌ، فَأَكَلَ أَوْ شَرِبَ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1155]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால், அவர் தமது நோன்பை முழுமைப் படுத்தட்டும்; ஏனெனில், அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [முஸ்லிம் - 1155]
ஒருவர் கடமையான (பர்ழான) அல்லது நப்லான- நோன்பு நோற்று இருக்கும் நிலையில் மறதியாக சாப்பிட்டால் அல்லது ஏதாவது பானத்தை குடித்து விட்டால் அவர் நோன்பை விட்டுவிடாது அதனைப் பூரணப்படுத்தல் வேண்டும்; ஏனெனில் இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவருக்குக்கு கிடைத்த உணவாகும். இந்த வகையில் அல்லாஹ்வே அவருக்கு உணவளித்து குடிக்கக் கொடுத்தான் என நபியவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.