«الصَّلَوَاتُ الْخَمْسُ، وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ، وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ، مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الْكَبَائِرَ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 233]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு கூறுகின்றார்கள் :
'ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை பெரும் பாவங்களை ஒருவர் தவிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு அவைகள் குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது.'
பெரும்பாவங்களை விட்டும் விலகியிருக்கும் காலமெல்லாம், தினமும் நிறைவேற்றும் ஐவேளை தொழுகைகளும், ஒவ்வொரு வாரமும் நிறைவேற்றும் ஜும்ஆத் தொழுகையும், ஒவ்வொரு வருடமும் ரமழானில் நோற்கும் நோன்பும் சிறிய பாவங்களுக்கான பரிகாரமாக அமைந்து விடுகின்றன என நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். விபச்சாரம், மது அருந்துதல் போன்ற பெரும்பாவங்களைப் பொருத்தவரை தவ்பா –பவாமீட்சி- கோருவதே அதற்குரிய பரிகாரமாக அமையும்.