قُلْتُ: يَا رَسُولَ اللهِ، قُلْ لِي فِي الْإِسْلَامِ قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا غَيْرَكَ، قَالَ: «قُلْ: آمَنْتُ بِاللهِ، ثُمَّ اسْتَقِمْ».
[صحيح] - [رواه مسلم وأحمد] - [مسند أحمد: 15416]
المزيــد ...
ஸுப்யான் இப்னு அப்துல்லாஹ் அஸ்ஸகபி ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதரிடம் : அல்லாஹ்வின் தூதரே தங்களுக்குப் பிறகு இஸ்லாத்தைப் பற்றி எவரிடமும் கேட்டகத் தேவையில்லாத அளவு எனக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள் எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டேன் எனக் கூறி அதிலேயே உறுதியாக நிலைத்திருப்பீராக எனக் கூறினார்கள்.
நபித்தோழர் ஸுப்யான் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தாம் கடைப்பிடித்தொழுகுவதற்கு இஸ்லாத்தின் கருத்துக்கள் யாவும் பொதிந்துள்ள, அது குறித்து வேறு யாரிடமும் கேட்பதற்கு அவசியமற்ற ஒரு கூற்றை சொல்லித் தருமாறு வேண்டினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அவரிடம் : நான் அல்லாஹ் ஒருவன் என்று ஏற்று , அவனே எனது இரட்சகனும், உண்மையான கடவுளும், எனது படைப்பாளனும், எனது உண்மையான இறைவனுமாவான், அவனுக்கு நிகராக எவனும் இல்லை என்று நம்பிக்கை கொண்டேன் எனக் கூறுவீராக என்று வேண்டினார்கள். பின் அல்லாஹ் விதித்த கட்டாயக் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமும் அல்லாஹ் தடுத்த விடயங்களை தவிர்ந்திருப்பதன் மூலமும் அவனுக்குக் கட்டுப்பட்டு அதிலே நிலைத்திருக்குமாறும் வேண்டினார்கள்.