«لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1098]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நோன்பு திறப்பதை (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் (நலவிலே) நிலைத்திருக்கிறார்கள்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [முஸ்லிம் - 1098]
சூரியன் மறைந்துவிட்டது என்பது உறுதியானதன் பின், மக்கள் தங்கள் நோன்பைத் துறக்க தாமதிக்காது விரைந்து செல்லும் காலமெல்லாம், அவர்கள் நலவில் இருப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில், இது நபி (ஸல்) அவர்களின் சுன்னாவைப் பின்பற்றி, அவர் நிர்ணயித்த வரம்புகளை மீறாமல் இருப்பதற்கான வழிகாட்டலாகும்.