عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمي رحمه الله قَالَ:
حَدَّثَنَا مَنْ كَانَ يُقْرِئُنَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ كَانُوا يَقْتَرِئُونَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ آيَاتٍ، فَلَا يَأْخُذُونَ فِي الْعَشْرِ الْأُخْرَى حَتَّى يَعْلَمُوا مَا فِي هَذِهِ مِنَ الْعِلْمِ وَالْعَمَلِ، قَالُوا: فَعَلِمْنَا الْعِلْمَ وَالْعَمَلَ.
[حسن] - [رواه أحمد] - [مسند أحمد: 23482]
المزيــد ...
அபூ அப்திர்ரஹ்மான் அஸ்ஸுலமி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தோழர்களில் எமக்கு அல்குர்ஆனை கற்றுத்தந்தோர் தாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பத்து வசனங்களை கற்றுக்கொள்ளக்கூடி யவர்களாக இருந்ததோடு, கற்ற அந்தப் பத்துவசனங்கில் உள்ள விடயங்களை கற்று அமல் செய்யும் வரையில் மற்றைய பத்து வசனங்களை அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை எனக் கூறினார்கள் எனவே இதனால் நாம் அறிவையும் அமலையும் அறிந்து கொண்டோம் என்று கூறினார்கள்;
[ஹஸனானது-சிறந்தது] - [இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்] - [مسند أحمد - 23482]
நபித்தோழர்களாகிய ஸஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அல்குர்ஆனில் பத்து வசனங்களை கற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருந்ததோடு,அந்தப் பத்து வசனங்களில் உள்ள அறிவைக் கற்று அதனை செயல்படுத்தும் வரையில் மேலும் பத்து வசனங்களை கற்பதற்கு செல்ல வில்லை. இதனால் அவர்கள் அறிவையும் அமலையும் ஒன்று சேர அறிந்து கொண்டார்கள்.