«الحَسَن والحُسَيْن سَيِّدا شَباب أهْل الجنة».
[صحيح] - [رواه الترمذي وأحمد] - [سنن الترمذي: 3768]
المزيــد ...
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:
ஹஸன், ஹுஸைன் (ரழி) ஆகியோர் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும்.
[சரியானது] - [இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது] - [ஸுனன் திர்மிதீ - 3768]
இங்கு நபியவர்கள் தனது மகள் பாத்திமா மற்றும் அலீ பின் அபீ தாலிப் அவர்களது பிள்ளைகளாகிய ஹஸன், ஹுஸைன் ஆகிய இரு பேரப்பிள்ளைகளும், வாலிபர்களாக மரணித்து அல்லாஹ்வின் கிருபையினால் சுவனம் நுழைந்த அனைவருக்கும், அல்லது நபிமார்களையும் நேர்வழி நடந்த கலீபாக்களையும் தவிர்ந்து அனைத்து சுவனபதி வாலிபர்களுக்கும் தலைவர்களாக இருப்பார்கள் என அறிவிக்கின்றார்கள்.