«يَا مَعْشَرَ النِّسَاءِ، تَصَدَّقْنَ، فَإِنِّي أُرِيتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ» فَقُلْنَ: وَبِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «تُكْثِرْنَ اللَّعْنَ، وَتَكْفُرْنَ العَشِيرَ، مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الحَازِمِ مِنْ إِحْدَاكُنَّ»، قُلْنَ: وَمَا نُقْصَانُ دِينِنَا وَعَقْلِنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَلَيْسَ شَهَادَةُ المَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهَادَةِ الرَّجُلِ» قُلْنَ: بَلَى، قَالَ: «فَذَلِكِ مِنْ نُقْصَانِ عَقْلِهَا، أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ» قُلْنَ: بَلَى، قَالَ: «فَذَلِكِ مِنْ نُقْصَانِ دِينِهَا».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 304]
المزيــد ...
அபூ ஸஈத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நோன்புப் பெருநாட் தினமோ, அல்லது ஹஜ்ஜுப் பெருநாட் தினமோ தொழுமிடத்திற்குச் சென்ற போது, பெண்களிடம் சென்று இவ்வாறு கூறினார்கள்:
“பெண்கள் சமுதாயமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிக எண்ணிக்கையில் எனக்குக் காட்டப் பட்டீர்கள்” என்று குறிப்பிட்டார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்து கொள்கிறீர்கள். அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர் களாகவும், தீர்க்கமான யோசனை உடைய ஆண்களின் கூர்மையான அறிவைக்கூட மழுங்க வைப்பவர்களாகவும் உங்களைப் போன்று வேறு யாரையும் நான் கண்டதில்லை” என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள், “மார்க்கத்திலும் அறிவிலும் எங்களிடமுள்ள குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், “ஆம் (பாதிதான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்” என்று கூறிவிட்டு, “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?” என்று கேட்டார்கள். அப்பெண்கள் “ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்” என்று கூறினார்கள்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 304]
ஒரு பெருநாள் தினம் நபி (ஸல்) அவர்கள் தொழுமிடத்திற்குச் சென்றார்கள். ஏற்கனவே, பெண்களிடம், அவர்களுக்குத் தனியாக உபதேசிப்பதாக வாக்களித்திருந்தார்கள். அந்நாளில் அதை நிறைவேற்றினார்கள். நபியவர்கள் இவ்வாறு உபதேசித்தார்கள்: பெண்களே! தர்மம் செய்யுங்கள். அதிகம் பாவமன்னிப்புக் கேளுங்கள். இவ்விரண்டும் பாவமன்னிப்பின் மிக முக்கிய காரணிகளாகும். மிஃராஜ் உடைய இரவில், உங்களை நான் நரகவாதிகளில் அதிகமானவர்களாகக் கண்டேன்.
அப்போது அவர்களில் இருந்த அறிவும், புத்திசாதுர்யமும், நிதானமும் மிக்க ஒரு பெண், நாம் ஏன் நரகவாதிகளில் அதிகமானவர்களாக இருக்க வேண்டும்? எனக் கேட்டார்.
அதற்கு நபியவர்கள், 'பல காரணங்களினால். அதிகம் ஏசுகின்றீர்கள், சபிக்கின்றீர்கள், கணவனது உரிமையை மறுக்கின்றீர்கள். பின்பு நபியவர்கள் அவர்களை இவ்வாறு வர்ணித்தார்கள்: அறிவும், தீர்க்கமும், தன் விவகாரங்களைக் கையாளும் திறமையும் கொண்ட ஒரு ஆணையே மிகைப்பவர்களாக, அறிவும், மார்க்கமும் குறைவாக உள்ள பெண்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை.
அப்போது அப்பெண், 'அல்லாஹ்வின் தூதரே! அறிவிலும், மார்க்கத்திலும் குறையிருத்தல் என்பதன் அர்த்தம் என்ன? எனக் கேட்டார்.
அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: பகுத்தறிவுக் குறைபாடென்பது, ஒரு ஆணின் சாட்சியத்திற்கு நிகராக இரு பெண்களின் சாட்சியம் இருப்பதாகும். இது அவளது பகுத்தறிவுக் குறைபாடாகும். மார்க்கத்தில் குறைபாடென்பது, நல்லமல்களின் குறைபாடாகும். அதாவது, மாதவிடாய் காரணமாக பல நாட்கள் அவள் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்கின்றாள். இதுவே மார்க்கத்தில் குறைபாடு. எனினும், இதற்காக அவர்கள் குற்றம்பிடிக்கப்படவோ, கண்டிக்கப் படவோ மாட்டார்கள். இது அவர்களது இயற்கையான படைகோலம். இது, மனிதன் இயற்கையிலேயே பணத்தை விரும்புபவனாகவும், தன் விவகாரங்களில் அவசரப்படுபவனாகவும், அறியாமையுள்ளவனாகவும் இருப்பதைப் போல. இங்கு நபியவர்கள் அதைக் குறித்துக் கூறியது, அவர்களால் குழப்பத்திற்குள்ளாகாமல் இருக்கவே.
قال ابن حجر في قوله: "e;ما رأيت من ناقصات... إلخ"e; ويظهر لي أن ذلك من جملة أسباب كونهن أكثر أهل النار؛ لأنهن إذا كُنّ سببًا لإذهاب عقل الرجل الحازم حتى يفعل أو يقول ما لا ينبغي فقد شَارَكْنَه في الإثم وزِدْن عليه.قوله ﷺ الله عليه وسلم:" أذهب للب الرجل الحازم منكن" أليس هذا مدح لمعشر النساء؟ لأن باستطاعتها ذهاب عقل الرجل الحازم.