«إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ، ثُمَّ صَلُّوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللهُ عَلَيْهِ بِهَا عَشْرًا، ثُمَّ سَلُوا اللهَ لِيَ الْوَسِيلَةَ، فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ، لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللهِ، وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ لِيَ الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 384]
المزيــد ...
தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
தொழுகை அறிவிப்பாளரின் (முஅத்தின்) அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
தொழுகைக்காக முஅத்தின் அதான் சொல்லக் கேட்டால் 'ஹய்யஅலஸ்ஸலாத்'; ஹய்யஅலலல் பலாஹ்' தவிர்ந்த வாசகங்களில் அவரைத் தொடர்ந்து அவர் கூறுவதைப் போன்று பதில் கூறுமாறும், மேற்படி இரு வாசகங்களை கூறுகையில் 'லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ்' என்று பதில் கூறுமாறும், அதான் கூறி முடிந்ததைத் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுமாறும் இந்த ஹதீஸில் வழிகாட்டுகிறார்கள். யார் நபியவர்கள் மீது ஒரு முறை ஸலவாத் கூறுகிறாரோ அதன் காரணமாக அவரின் மீது அல்லாஹ் பத்து தடவை ஸலவாத் கூறுகிறான். அல்லாஹ் அடியார் மீது ஸலவாத் கூறுதல் என்பது மலக்குகளிடத்தில் அந்த அடியானை அல்லாஹ் புகழ்வதைக் குறிக்கும்.
பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வஸீலா எனும் சுவர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியை வழங்குமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சுமாறு கட்டளையிட்டார்கள். இவ்வுயர் பதவியானது உலகில் உள்ள அனைத்து அடியார்களில் ஒரே ஒரு அடியாருக்குத் தவிர வேறு யாருக்கும் சாத்தியமாகாது. அந்த அடியான் நானாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்றேன். இவ்வாறு நபியவர்கள் கூறியது அவர்களின் பணிவினாலாகும். ஏனெனில் அடியார்களில் இவ்வுயரிய அந்தஸ்தை பெருவதற்கு அவ்கள்; ஒருவரே பொருத்தமானவர்கள்; காரணம், அவர்களே அடியார்களில் மிகவும் சிறப்புக்குரியர்கள்.
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் நபியவர்களுக்காக வஸீலாவை அல்லாஹ்விடம் கேட்கிறாறோ அவருக்கு நபியவர்களின் ஷபாஅத் -பரிந்துரை கிடைக்கும் எனவும் தெளிவு படுத்துகிறார்கள்.