تَسَحَّرْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَامَ إِلَى الصَّلاةِ، قُلْتُ: كَمْ كَانَ بَيْنَ الأَذَانِ وَالسَّحُورِ؟ قَالَ: قَدْرُ خَمْسِينَ آيَةً.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1921]
المزيــد ...
ஸைத் இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
நாம் அல்லாஹ்வின் தூதரோடு ஸஹ்ர் செய்தோம். பின்னர் அவர்கள் தொழுகைக்காக சென்றார்கள். நான் ஸைதிடம் அதானுக்கும் ஸஹ்ர் உணவுக்குமிடையில் எவ்வளவு இடைவெளி இருந்ததென கேட்டேன். அதற்கு ஐம்பது ஆயத்துக்கள் அளவு என்றார்கள் என அனஸ் அறிவிக்கிறார்கள்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 1921]
நபித் தோழர்களில் சிலர் (ரழியல்லாஹு அன்{ம்;) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஸஹ்ர் உணவு உண்டார்கள் பின்னர் ஃபஜ்ர் தொழுகைக்காக எழுந்து சென்றார்கள். அப்போது அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸைத் இப்னு தாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ஸஹுர் -ஸஹ்ர் உணவை முடிப்பதற்கும் தொழுகைக்கான அழைப்புக்கும் இடையிலான இடைவெளி எவ்வளவு இருந்தது என்று கேட்டார்கள்? அதற்கு ஸைத் இப்னு ஸாபித் (ரழி) அவர்கள் மிக நீண்ட வசனமோ அல்லது மிகச்சிறிய வசனமோ அல்லாது ஐம்பது நடுத்தரமான வசனங்களை சாதாரண வேகத்தில் ஓதக்கூடிய நேரம் என்று கூறினார்கள்.