عن أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«تَسَحَّرُوا، فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1923]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
ஸஹ்ர் செய்யுங்கள். நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பறக்கத் (அபிவிருத்தி) இருக்கிறது.

[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 1923]

விளக்கம்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸுஹுர் செய்வதை ஊக்குவித்தார்கள். ஸஹுர் என்பது இரவின் கடைசிப் பகுதியில் நோன்பு நோற்பதற்கு தயாராகும் நோக்குடன் உண்ணும் உணவாகும், அதிகமான நன்மை மற்றும் பரகத் (அபிவிருத்தி) கிடைக்கின்றமை, இரவின் கடைசிப் பகுதியில் தொழுது பிரார்த்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றமை, நோன்பு நோற்பதற்கான வலிமையும்; அதற்கான புத்துணர்ச்சியும் கிடைக்கின்றமை, நோன்பின் கஷ்டத்தைக் குறைத்தல் போன்ற பல நன்மைகள் ஸஹர் செய்வதினால் கிடைக்கப் பெறுகின்றன. இதன் காரணமாக நபியவர்கள் ஸஹர் உணவை உண்ணுமாறு ஊக்குவித்துள்ளார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஸஹ்ர் உணவு உண்பது விரும்பத்தக்க ஒரு ஸுன்னாவாகும். அதை நடைமுறைப்படுத்துவதன் மூலமே அம்மார்க்கக் கட்டளையை நிறைவேற்றியதாக அமையும்.
  2. இப்னு ஹஜர் கூறுகின்றார்கள்: 'ஸஹ்ர் உணவின் அருளை (பரக்கத்தை) பல்வேறு வழிகளில் அடைந்து கொள்ள முடிகிறது. அவற்றுள் : நபி (ஸல்) அவர்களின் சுன்னாவைப் பின்பற்றுதல், வேதக்காரர்களுக்கு மாற்றம் செய்தல், வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான சக்தியைப் பெறுதல், புத்துணர்ச்சியை அதிகரித்தல், பசியால் ஏற்படக்கூடிய தீய குணங்களை தவிர்த்தல், ' ஸஹ்ர் உணவின்; போது தன்னிடம் வருபவர்களுக்கு அல்லது தன்னுடன் உணவைப் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களுக்கு தர்மம் செய்தல், பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் நேரத்தை கருத்திற்கொண்டு திக்ர் மற்றும் பிரார்த்தனையில் ஈடுபடுதல், தூங்கும் முன் நோன்பு நோற்பதற்கான நிய்யத்தை மறந்தவர்களுக்கு அந்த நிய்யத்தை வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பை பெறுதல் இவை அனைத்தும் ஸஹ்ர் உணவின் விளைவால் கிடைக்கப்பெறும் நன்மைகளாகும்'. (ஃபத்ஹுல் பாரி)
  3. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனை முறைகளில் அழகு என்னவென்றால், அவர் எப்போதும் ஒரு சட்டத்தை அதன் நுட்பத்துடன் - இணைத்து விளக்குவதாகும். இது மனதை திருப்திப் படுத்துவதோடு, இஸ்லாமிய சட்டத்தின் (ஷரியா) உயர்ந்த அந்தஸ்தையும் மகத்துவத்தையும் புரிந்து கொள்ள காரணமாக உள்ளது.
  4. இப்னு ஹஜர் அவர்கள் கூறுகிறார்கள் : ஸஹ்ர் ஒருவர் உற்கொள்ளும் மிகக் குறைந்தளவிளான உணவு அல்லது பாணத்தின் மூலம் நிறைவேறும்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (46)