«حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ أَنْ يَغْتَسِلَ فِي كُلِّ سَبْعَةِ أَيَّامٍ يَوْمًا، يَغْسِلُ فِيهِ رَأْسَهُ وَجَسَدَهُ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 897]
المزيــد ...
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
'ஏழு நாற்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்'
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 897]
வாரத்தில் ஒரு நாள் குளிப்பது பருவவயதை அடைந்த புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வலியுறுத்தப்பட்ட விடயமாகும். அதில் அவர் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளும் முகமாக தனது தலையையும் மேனியையும் கழுவிக்கொள்ள வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை குளிப்பதற்கு மிகவும் பொருத்தமான நாளாக ஜும்ஆத்தினம் விளங்குகிறது. இதனை சில அறிவிப்புகளிருந்து தெரிந்து கொள்கிறோம். ஜும்ஆத் தொழுகைக்கு முன் குளிப்பது வலியுறுத்தப்பட்டதும் விரும்பத்தக்கதுமான ஒரு விடயம் என்பதை மேற்படி ஹதீஸ் குறிப்பிடுகிறது. ஆனால் ஒருவர் வாரத்தில் உதாரணத்திற்கு வியாழக்கிழமை குளித்தாலும் பரவாயில்லை. ஏனெனில் ஜும்ஆ நாளில் கட்டாயம் குளித்தாக வேண்டும் என்பதை விடுத்து அது விரும்பத்தக்க விடயம் என்பதை பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது : ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் 'அன்றைய மக்கள் உழைப்பாளர்களாக இருந்தனர். அவர்கள் ஜும்ஆவுக்கு வரும்போது அதே தோற்றத்துடனேயே வந்து விடுவார்கள். இதனால்தான் நீங்கள் குளித்துக் கொள்ளலாமே (குளித்து சுத்தமாகிக் கொண்டால் நன்றாய் இருக்குமே) என்று அவர்களிடம் கூறப்பட்டது' (ஆதாரம் புஹாரி) இன்னொரு அறிவிப்பின் படி அவர்களிடம் வியர்வை துர்நாற்றம் வீசியது அவ்வாறிருந்தும் அவர்களுக்கு ' நீங்கள் குளித்திருக்கலாமே' என்ற கட்டளை வாசகமல்லாத அறிவுரை வாசகமாகமே சொல்லப்பட்டது. அந்த வகையில் இவர்களுக்கே இந்த அறிவுரை இருக்கும் போது இவர்கள் அல்லாதோர் குளிக்காது சமூகமளிப்பதில் எவ்விதக் குற்றமுமில்லை.