பிரிவுகள்:
+ -
عن العِرْباضِ بن ساريةَ رضي الله عنه قال:

قام فينا رسول الله صلى الله عليه وسلم ذات يوم، فوَعَظَنا مَوعظةً بليغةً وَجِلتْ منها القلوبُ، وذَرَفتْ منها العيونُ، فقيل: يا رسول الله، وعظتَنَا موعظةَ مُودِّعٍ فاعهد إلينا بعهد. فقال: «عليكم بتقوى الله، والسمع والطاعة، وإن عبدًا حبشيًّا، وسترون من بعدي اختلافًا شديدًا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، عَضُّوا عليها بالنواجِذ، وإياكم والأمور المحدثات، فإن كل بدعة ضلالة».
[صحيح] - [رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد] - [سنن ابن ماجه: 42]
المزيــد ...

அல்-இர்பாழ் இப்னு ஸாரியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு தினம் எழுந்து நின்று உள்ளங்கள் நடுங்கி, கண்கள் கண்ணீர் சிந்துமளவிற்கு மிகவும் ஆழமான ஓர் உபதேசத்தை செய்தார்கள். அப்போது ஒருவர் 'அல்லாஹ்வின் தூதரே, இது விரைவில் பிரிந்து செல்லும் ஒருவரின் அறிவுரையாயிற்றே. எனவே, எங்களுக்கு அறிவுரை கூறுங்கள்' என்றார். அதற்கு நபியவர்கள்: 'அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன், ஒரு அபீஸீனிய அடிமை உங்களுக்குப் பொறுப்பாளராக வந்தாலும், அவருக்கு செவிசாய்த்து கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள். எனக்குப் பிறகு நீங்கள் கடுமையான கருத்து வேறுபாடுகளைக் கண்டு கொள்வீர்கள். எனவே, எனது ஸுன்னாவையும் நேர்வழிநடந்த கலீபாக்களின் ஸுன்னாவையும் உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் உங்கள் கடைவாய் பற்களால் பற்றிக்கொள்ளுங்கள்; (அதாவது அதனை உறுதியாக கடைப்பிடித்தொழுகுங்கள்) மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட நூதன அனுஷ்டானங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன், மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு விஷயமும் வழிகேடாகும் (பிழையான வழிகாட்டுதலாகும்.)

[ஸஹீஹானது-சரியானது] - - [سنن ابن ماجه - 42]

விளக்கம்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களுக்கு உள்ளங்கள் நடுங்கி, கண்கள் கண்ணீர் சிந்துமளவிற்கு மிகவும் ஆழமான ஒரு உபதேசத்தை செய்தார்கள். அவ்வுபதேசத்தின் கனதியை அவதானித்த தோழர்கள்; 'அல்லாஹ்வின் தூதரே! இது விரைவில் பிரிந்து செல்லும் ஒருவரின் அறிவுரையாயிற்றே. எனவே, உங்களுக்குப் பின் கடைப்பிடித்தொழுகும் படியான அறிவுரையை எங்களுக்கு கூறுங்கள்' என்றார்கள். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ் விதித்த கடமைகளை செய்வதன் மூலமும் தடுத்தவிடயங்களை விலகி நடப்பதன் மூலமும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அறிவுரை கூறுகிறேன் என்றார்கள். மேலும் தலைவர்களுக்கு செவிசாய்த்து கட்டுப்பட்டு நடக்குமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன். உங்களுக்கு ஓர் அடிமை தலைவராக நியமிக்கப்பட்டாலும், அல்லது அதிகாரத்தை பொறுப்பேற்றாலும், அதாவது உங்களில் அந்தஸ்தில் குறைந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டாலும், குழப்பங்கள் ஏற்படுவதைப் பயந்து அவரை புறக்கணிக்காது அவருக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள். அத்துடன் உங்களில் எனக்குப்பின் வாழ்வோர் அதிகமான கருத்து முரண்பாடுகளை –பிரச்சினைகளை –கண்டுகொள்வார். பின்னர் இந்த முரண்பாடுகளிலிருந்து தப்பிக்கும் வழியை தெளிவுபடுத்துகிறார்கள். அதுவே அவர்களினதும் அவர்களுக்கு பிறகு வந்த நேர்வழி நடந்த கலீபாக்களான அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ரழியல்லாஹு அன்ஹும் போன்றோரினது வழிமுறையை பின்பற்றுவதாகும். அதனைப் பின்பற்றி அதில் உறுதியாக இருப்பதுமாகும். மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்படுகின்ற நூதன விடயங்களை விட்டும் அவர்களை எச்சரிப்பதோடு அனைத்து பித்அத்துக்களும் வழிகேடு என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.

الملاحظة
ترجمة انحليزي
النص المقترح Among them: Adherence to the Sunnah. On the authority of Al-Arbadh bin Sariyah, may God be pleased with him, on the authority of the Prophet, may God bless him and grant him peace, he said: “Adhere to my Sunnah and the Sunnah of the rightly-guided caliphs. Hold fast to it and cling to it firmly. Beware of newly invented matters, for every newly invented matter is an innovation and every innovation is misguidance.” Narrated by Abu Dawud (4607) and authenticated by Al-Albani in Sahih Abi Dawud.
الملاحظة
ترجمة انحليزي
النص المقترح Among them: Adherence to the Sunnah. On the authority of Al-Arbadh bin Sariyah, may God be pleased with him, on the authority of the Prophet, may God bless him and grant him peace, he said: “Adhere to my Sunnah and the Sunnah of the rightly-guided caliphs. Hold fast to it and cling to it firmly. Beware of newly invented matters, for every newly invented matter is an innovation and every innovation is misguidance.” Narrated by Abu Dawud (4607) and authenticated by Al-Albani in Sahih Abi Dawud.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஸுன்னாவை கடைப்பிடித்து ஒழுகுவதன் முக்கியத்துவம் விபரிக்கப்பட்டிருத்தல்.
  2. அறிவுரை மற்றும் உள்ளத்தை மென்மைப்படுத்தும் விடயங்களில் கவனம் செலுத்துதல்.
  3. நபியவர்களின் பின் ஆட்சிப்பொறுப்பேற்று நடாத்திய நேர்வழிமிக்கோரான அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோரை பின்பற்றி நடக்குமாறு கட்டளையிடப்பட்டிருத்தல்.
  4. மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படுகின்ற பித்அத்களை தடுத்தல். ஏனெனில் ஒவ்வொரு பித்அத்துக்களும் வழிகேடாகும்.
  5. பாவகாரியமல்லாத விடயங்களில் முஸ்லிம்களின் தலைமத்துவத்தைப் பொறுப்பேற்று நடாத்துவோருக்கு கட்டுப்பட்டு அவர்களின் கட்டளைக்கு செவிதாழ்த்தி நடந்து கொள்ளல்.
  6. எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை பயந்து நடப்பதன் அவசியம் விவரிக்கப்பட்டிருத்தல்.
  7. இந்த சமூகத்தில் கருத்து முரண்பாடு நிகழும். அவ்வேளை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களினதும், நேர்வழி நடந்த கலீபாக்களினதும் வழிமுறையின் பால் மீண்டு செல்வது அவசியமாகும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية المقدونية
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு