عَنْ ‌عَائِشَةَ رضي الله عنها:
أَنَّ رَجُلًا قَعَدَ بَيْنَ يَدَيِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ لِي مَمْلُوكِينَ يَكْذِبُونَنِي وَيَخُونُونَنِي وَيَعْصُونَنِي، وَأَشْتُمُهُمْ وَأَضْرِبُهُمْ، فَكَيْفَ أَنَا مِنْهُمْ؟ قَالَ: «يُحْسَبُ مَا خَانُوكَ وَعَصَوْكَ وَكَذَّبُوكَ وَعِقَابُكَ إِيَّاهُمْ، فَإِنْ كَانَ عِقَابُكَ إِيَّاهُمْ بِقَدْرِ ذُنُوبِهِمْ كَانَ كَفَافًا، لَا لَكَ وَلَا عَلَيْكَ، وَإِنْ كَانَ عِقَابُكَ إِيَّاهُمْ دُونَ ذُنُوبِهِمْ كَانَ فَضْلًا لَكَ، وَإِنْ كَانَ عِقَابُكَ إِيَّاهُمْ فَوْقَ ذُنُوبِهِمُ اقْتُصَّ لَهُمْ مِنْكَ الْفَضْلُ»، قَالَ: فَتَنَحَّى الرَّجُلُ فَجَعَلَ يَبْكِي وَيَهْتِفُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا تَقْرَأُ كِتَابَ اللهِ: {وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا}، الْآيَةَ»، فَقَالَ الرَّجُلُ: وَاللهِ يَا رَسُولَ اللهِ، مَا أَجِدُ لِي وَلهُمْ شَيْئًا خَيْرًا مِنْ مُفَارَقَتِهِمْ، أُشْهِدُكَ أَنَّهُمْ أَحْرَارٌ كُلُّهُمْ.

[ضعيف] - [رواه الترمذي]
المزيــد ...

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் முன் ஒரு மனிதர் வந்து அமர்ந்து கூறினார்: 'அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் பொய் கூறி;, என்னை ஏமாற்றி, எனது ஆணைகளுக்கு கீழ்ப்படியாத இரண்டு அடிமைகள் என்னிடம் உள்ளனர். நான் அவர்களைத் கண்டிப்பதோடு,அவர்களை அடித்து தண்டிக்கிறேன்.எனவே அவர்களுடன் இவ்வாறு நடந்து கொள்வது பற்றி என்ன கூறுகிறீர்கள்?' என வினவியபோது அதற்கு நபியவர்கள்: 'அவர்கள் உமக்கு எந்த அளவிற்கு துரோகம் செய்து, கீழ்ப்படியாமல் இருந்தமைக்கும்;, பொய் சொன்னமைக்கும்;, நீர் அவர்களை எவ்வளவு தண்டித்தீர்கள் ; என்பதை பொறுத்தே மறுமையில் விசாரிக்கப்படும் என்று கூறினார்கள். நீங்கள் அவர்களைத் தண்டிப்பது அவர்களின் குற்றங்களுக்கு சமமாக இருந்தால், அது நீதியாக அமைந்துவிடும் அதனால் உமக்கே அவர்களுக்கோ எவ்விதக்குற்றமுமில்லை, நீ அவர்களை தண்டிப்பது அவர்களின் குற்றத்தை விட அதிகமாக இருந்தால், உமக்குக் கிடைக்கும் வெகுமதிகள் சில உம்மிடமிருந்து எடுத்து அவர்களுக்கு வழங்கப்படும்.' உடனே அந்த மனிதன் நபியவர்களை விட்டு விலகி, சத்தமாக அழ ஆரம்பித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள அவரை நோக்கி : 'அல்லாஹ் தனது வேதத்தில் கூறியதை நீங்கள் படிக்க விலலையா? எனக்கேட்டுவிட்டு 'மறுமை நாளில் நாம் நீதியான தராசுகளையே நாம் ஏற்படுத்துவோம்.எனவே எந்த ஆத்மாவும் சிறிதளவும் அநியாயம் செய்யப்படமாட்டாது. வசனம் (21:47) உடனே அந்த மனிதர் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் தூதரே! நான் அவர்களை விட்டு பிரிந்துவிடுவதை விட தவிர வேறு எதுவும் நன்மையான காரியமாக நான் காணவில்லை என்று கூறிவிட்டு, அவர்கள் அனைவரும் சுதந்திரவான்கள் என்பதற்கு சாட்சியாக இருங்கள்.' என்று கூறினார்.

ஸஹீஹானது-சரியானது - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்

விளக்கம்

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் தனது அடிமைகளின் நடவடிக்கை குறித்து முறையிடுவதற்காக வந்து இவ்வாறு கூறினார் 'அவர்கள் தகவல் கூறும்போது பொய்கூறுபவர்களாகவும்,நம்பிக்கை துரோகம் செய்வோராகவும்,கொடுக்கள் வாங்கள் நடவடிக்கைளில் மோசடி செய்கிறவர்களாகவும்,எனது கட்டளைகளை மீறி நடக்கின்றவர்களாகவும் இருக்கின்றனர் இதனால் அவர்களை தான் திட்டுவதாகவும்,அவர்களை நெறிப்படுத்த தண்டிப்பதாகவும் கூறினார்.இவ்வாறு அவர்களுடன் நடந்து கொள்ளும் நிலையில் மறுமையில் தனது நிலை என்ன என்பது பற்றி நபியவர்களிடம் விசாரித்தார்? அதற்கு நபியவர்கள் உமக்கு அவர்கள் எந்த அளவுக்கு துரோகம் செய்து உமது கட்டளை மீறி நடந்து,உனக்கு பொய் கூறினார்களோ அந்த அளவுக்கு ஏற்பவே உமது தண்டனை கணிக்கப்படும். உமது தண்டனை அவர்களின் குற்றத்திற்கு சமமாக இருந்திருந்தால் உமக்கோ அவர்களுக்கே எவ்விதப்பிரச்சினையும் இல்லை.அவர்களின் குற்றத்திற்கு குறைவாக உமது தண்டனை அமைந்திருந்தால் அது உமது நன்மைகளை அதிகரிப்பதாக அமைந்து விடும் உமது தண்டனை அவர்களின் குற்றத்தைவிட அதிகமாக இருந்தால் நீ தண்டிக்கப்படுவதோடு உமது நன்மைகளிலிருந்து எடுத்து அவர்களுக்கு வழங்கப்படும். உடனே அந்த மனிதன் ஒரு ஓரத்திற்குப்போய் மிகவும் சப்தமாக அழலானார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள அவரை நோக்கி : 'அல்லாஹ் தனது வேதத்தில் கூறியதை நீங்கள் படிக்க விலலையா? ஏனக்கேட்டுவிட்டு 'மறுமை நாளில் நாம் நீதியான தராசுகளையே நாம் ஏற்படுத்துவோம்.எனவே எந்த ஆத்மாவும் சிறிதளவும் அநியாயம் செய்யப்படமாட்டாது. அது கடுகளவு வித்தாக இருப்பினும்அதையும் நாம் கொண்டுவருவோம் கணக்கெடுப்பதற்கு நாமே போதுமானவன்.' ஏன்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள்; (21:47) மறுமை நாளில் எவறும் அநியாம் இழைக்கபட்டமாட்டார்.மனிதர்களின் அமல்களை நிறுக்கு தராசுககள் மிக நீதமானதகவே அமையும். அப்போது அந்த மனிதர் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் தூதரே! நானும்; அவர்களும் பிரிந்துவிடுவதை விட வேறு எதுவும் நன்மையான காரியமல்ல என்று மறுமை நாளின் விசாரனை மற்றும் தண்டனைக்கு பயந்து கூறினார். இறுதியாக, அவர்கள் அனைவரும் சுதந்திரமானவர்கள் என்பதற்கு சாட்சியாக இருங்கள்.' என்று கூறினார்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்லாஹ்வின் பயம் காரணமாக தனது அடிமையை உரிமையிடுவதில் நபித்தோழர்கள் உண்மையாக நடந்து கொண்டமை.
  2. அநியாயத்திற்கு நிகராக பலிக்குப்பலி வாங்குதல் குறித்த அநியாயத்திற்கு சமமாக இருந்தால் அல்லது அதைவிட குறைவானதாக இருந்தால் அது அனுமதிக்கப்ட்டதாகும்.ஆனால் அதிகமாக அடிப்பது என்பது ஹராமாகும்.
  3. பணியாளர்களுடனுமும் ஏழை மக்களுடனும் சிறந்த முறையில் நடப்பதற்கு தூண்டியிருத்தால்.
மேலதிக விபரங்களுக்கு