عن أبي هريرة رضي الله عنه قالَ: قالَ رَسُولُ اللَّه -صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم-: «الشهداء خمسة: المطعون والمبطون، والغريق، وصاحب الهَدْمِ، والشهيد في سبيل الله». وفي رواية «ما تَعُدُّونَ الشهداء فيكم؟» قالوا: يا رسول الله، من قتل في سبيل الله فهو شهيد. قال: «إن شهداء أمتي إذا لقليل» قالوا: فمن هم يا رسول الله؟ قال: «من قتل في سبيل الله فهو شهيد، ومن مات في سبيل الله فهو شهيد، ومن مات في الطاعون فهو شهيد، ومن مات في البطن فهو شهيد، والغريق شهيد».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

"சுஹதாக்கள் எனும் வீர மரணம் எய்தியோர் ஐவர்:அவர்கள் கொள்ளை நோய்,வயிற்று வழி,நீரில் மூழ்குதல்,இடிபாடுகளில் சிக்கி விடுதல் எனும் காரணமாக மரண மடைந்தவரும்,அல்லாஹ்வின் பாதையில் வீர மரணம் அடைந்தவருமாவர்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மேலும் "உங்களில் சுஹதாக்கள் எத்தனை பேர்? என்று ரஸூல் (ஸல்) அவர்கள் வினவினார்கள்.அதற்கு அல்லாஹ்வின் தூதரே! எவர்அல்லாஹ்வின் பாதையில் கொலை செய்யப்படுகின்றாரோ அவர்தான் சஹீத்,என்று தோழர்கள் கூறினர்.அப்படியாயின் எனது உம்மத்தில் சுஹதாக்கள் குறைவாகவே இருப்பர் என்று நபியவர்கள் கூறினா்கள்.அப்படியாயின் அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார் என்றனர் தோழர்கள்.அதற்கு "அல்லாஹ்வின் பாதையில் கொலை செய்யப்பட்டவன் ஒரு ஷஹீத்,அல்லாஹ்வின் பாதையில் மரணமடைந்தவனும் ஒரு ஷஹீத்,கொள்ளை நோயில் மரணமடைந்தவனும் ஒரு ஷஹீத்,வயிற்று வழியில் மரணமடைந்தவனும் ஒரு ஷஹீத்,தண்ணீரில் மூழ்கி மரணமடைந்தவனும் ஒரு ஷஹீத்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என இன்னொரு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

பொதுவாக வீர மரணமடைந்த ஷுஹதாக்கள் ஐந்து வகையினர்.அவர்களில் ஒருவர் கொள்ளை நோய் எனும் தொற்று நோயால் தாக்கப்பட்டவர்,இன்னொருவர் வயிற்று வழியால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்.மற்றுமொருவர் இஹ்ராம் உடையிலிருக்கும் முஹ்ரிமாகவன்றி கப்பல் பயணம் செய்து தண்ணீரில் மூழ்கி இறந்து போன சாதாரன பயணி,இன்னு மொருவர் கட்டிடம் போன்ற ஏதும் வீழ்ந்து அதில் சிக்குண்டு இறந்து போனவர்,மேலும் அல்லாஹ்வின் பாதையில் கொலை செய்யப்பட்டவருமாவார்.இவர்தான் ஷுஹதாக்களிடையே உயர்ந்த தரத்தை உடையவர்.மேலும் யுத்தமல்லாது அல்லாஹ்வின் வேறு பாதையில் மரணமடைந்தவனின் நிலையும் அதுவே.மேலும் முதலில் குறிப்பிட்ட நான்கு ஷுஹதாக்களும் மறுமையில் ஷுஹதாக்கள் என்ற பதவியைப் பெறுவர்.எனினும் அவர்கள் இவ்வுலகில் ஷுஹதாக்கள் என்ற சட்டத்திற்கு உட்பட மாட்டார்கள் எனவே அவர்களைக் குளிப்பாட்டுவதும்,அவர்களின் மீது தொழுகை நடாத்துவதும் அவசியம்.மேலும் ஹதீஸில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கை ஷுஹதாக்களை வரையரை செய்வதற்காகவன்றி பொதுவாகக் குறிப்பிட்டதாகும்.(அதாவது இது போன்று வேறு பல இடர்பாடுகளுக்கு ஆலாகி மரணமடைந்தவர்களும் ஷுஹதாக்களின் பட்டியலில் அடங்கவர்.)

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி
மொழிபெயர்ப்பைக் காண