«مَنْ تَعَلَّقَ شيئا وُكِلَ إليه».
[ضعيف] - [رواه أحمد والترمذي] - [مسند أحمد: 18781]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அகீம் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "பாதுகாப்பிற்காக யார் ஒரு பொருளைத் தொங்க விடுகிறாரோ அதன் பக்கமே அவர் சாட்டப்பட்டு விடுவார்".
தனது உள்ளத்தால், அல்லது செயலினால், அல்லது இரண்டினாலும் பயனை எதிர்பார்த்தோ, தீங்கைத் தடுக்கவோ ஒரு பொருளை நோக்கிச் சென்றால் அல்லாஹ் தனது பாதுகாப்பைக் கைவிட்டுவிட்டு, அப்பொருளிடமே அவனை சாட்டி விடுகின்றான். அல்லாஹ்வை யார் சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவன் போதுமானவன், அனைத்து சிரமங்களையும் இலகுபடுத்திக் கொடுத்து விடுவான். அவனல்லாத ஒன்றைச் சார்ந்திருந்தால் அதன் பக்கமே அவனை சாட்டி விட்டு, உதவ மறுத்து விடுவான்.
خذلان من انصرف عن الله وطلب النفع من غيره.من تعلق بالله كفاه فهو القوي الذي بيده كل شيء ومن تعلق بغيره فإن ذلك الغير ضعيف لا يملك شيء