عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ:

كُنَّا إِذَا بَايَعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ، يَقُولُ لَنَا: «فِيمَا اسْتَطَعْتُمْ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

இப்னு உமர் (ரழி) அன்ஹூமா அறிவிக்கிறார்கள். நாம் நபி (ஸல்) அவர்களுக்கு செவி சாய்த்து கட்டுப்படுவோம் என சத்தியப்பிரமானம் செய்தால் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு முடியுமானவற்றில் எனக் கூறுவார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

இப்னு உமர் (ரழி) அவர்கள் குறிப்பிடும் செய்தியில் அவர்கள் (ஸஹாபாக்கள்) நபியவர்களுக்கு சத்தியப்பிரமானம் (பைஅத்) செய்தால் நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு தான் சொல்வதை கேட்டு கட்டுப்பட்டு நடக்குமாறு கட்டளை இடுவார்கள்.கட்டுப்படுதல் என்பதை இயலுமை, ஒரு மனிதன் பெற்றிருக்கும் பலம் என்பவற்றுடன் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.எனவே ஒரு முஸ்லிமை பொருத்தவரை தனது அமீரிடமிருந்து (தலைமையிருந்து) தமது சக்திக்கு அப்பாட்பட்ட விடயமொன்றை செய்யுமாறு பொறுப்புச் சாட்டப்பட்டால் அந்த விடயத்தில் அவருக்கு கட்டுப்படத் தேவையில்லை. ஏனென்றால் அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புக்களைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம்
மொழிபெயர்ப்பைக் காண

பொருள் பதிவிறக்கம்

மேலதிக விபரங்களுக்கு