عن أبي موسى الأشعري رضي الله عنه مرفوعاً: «ثلاثة لهم أجران: رجل من أهل الكتاب آمن بنبيه، وآمن بمحمد، والعبد المملوك إذا أدى حق الله، وحق مواليه، ورجل كانت له أمة فأدبها فأحسن تأديبها، وعلمها فأحسن تعليمها، ثم أعتقها فتزوجها؛ فله أجران».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
மூவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு.அவர்கள் யாரெனில்: தனது நபியின் மீதும்,முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும் விசுவாசம் கொண்ட அஹ்லுல் கிதாபைச் சேர்ந்த ஒரு மனிதனும், அல்லாஹ்வின் கடமையையும்,தனது எஜமானனின் கடமையையும் நிறைவேற்றிய ஒரு அடிமையுமாகும், மற்றும் தனது பெண் அடிமைக்கு சீரிய முறையில் நல்லொழுக்கத்தையும் நல்லறிவையும் கற்றுக் கொடுத்து அவளுக்கு விடுதலையும் அளித்த பின்னர் அவளைத் திருமணம் செய்து கொண்ட ஒரு மனிதனுக்கும் இரண்டு நன்மைகள் உண்டென ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ மூஸா அல்அஷ்அரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
அஹ்லுல் கிதாபைச் சேர்ந்த ஒருவன்,தன் மார்க்கதைப் பின்பற்றியதுடன் இஸ்லாம் மார்க்கத்தின் மீதும் விசுவாசம் கொண்டு,முஹம்மத் (ஸல்) அவர்களையும் பின்பற்றியதன் காரணமாக அவனுக்கொரு தனிப் சிறப்பு உண்டென்பதையும்,மேலும் ஒரு அடிமை அல்லாஹ், மற்றும் தனது எஜமான் ஆகிய இரண்டு பேர்களினதும் கடமைகளையும் நிறைவேற்றும் பட்சத்தில் அவனுக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டென்பதையும்,மேலும் தனது பெண் அடிமைக்கு நல்லொழுக்கத்தையும், நல்லறிவையும் கற்றுக் கொடுத்த ஒரு மனிதனுக்கு அதற்காக ஒரு நன்மையும்,மேலும் அவன் அவளுக்கு விடுதலையளித்து அவளைத் திருமணம் செய்து அவளின் கற்பையும் பாதுகாத்து,அவளைத் தம்முடன் இணைத்துக் கொண்டமைக்காக அவனுக்கும் இன்னொரு நன்மை வழங்கப்படுகின்றது,என்று அவனின் சிறப்பையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது