عن أبي أمامة صُدَيّ بن عجلان الباهلي رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع، فقال: « اتقوا الله وصلَّوا خَمْسَكُمْ، وصوموا شهركم، وأَدُّوا زكاة أموالِكم، وأطيعوا أُمَرَاءَكُمْ تدخلوا جنة ربكم ».
[صحيح] - [رواه الترمذي
وأحمد]
المزيــد ...
ரஸூல் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜதுல் வதாஉவில் வைத்து பிரசங்கம் நிகழ்த்தும் போது "நீங்கள் உங்கள் இறைவனின் சுவர்க்கத்தில் பிரவேசிக்கும் பொருட்டு அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.உங்களின் ஐந்து தொழுகைகளையும் தொழுது வாருங்கள்.மேலும் உரிய மாதத்தில் நீங்கள் நோன்பு பிடியுங்கள்,உங்கள் செல்வத்தின் ஸகாத்தைக் கொடுத்து வாருங்கள்.மேலும் உங்களின் அதிகாரிளுக்குக் கட்டுப்பட்டு நடவுங்கள்" என்று சொல்வதை நான் செவிமடுத்தேன்.என்று அபூ உமாமா ஸுதைய் இப்னு இஜ்லான் அல்பாஹிலீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்
இது அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றி,அவனின் விலக்கல்களைத் தவிர்ந்து கொள்வதன் மூலம் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுமாறு ஆர்வமூட்டும் ஹதீஸ்களில் ஒன்று.ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் அந்திம காலத்தில் ஹஜ்ஜதுல் விதாஉவில் வைத்து மக்களுக்கு நிகழ்த்திய கருத்துச் செரிவுள்ள அதிகமான அறிவுரைகளை உள்ளடக்கிய பிரசங்கத்தில் இருந்த செய்தியே இது,இதன் மூலம் நபியவர்கள் மக்களுக்கு உரியது எதுவென்றும் அவர்களின் கடமை என்ன வென்றும் அவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் அவ்வமயம்( يا أيها الناس اتقوا ربكم ) மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்.என்று கூறினார்கள்,அது அல்லாஹ்வின் வாக்குيَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُم ا போன்றுள்ளது.(النساء:لآية1)இவ்வாறு தங்களைப் படைத்து,எண்ணிலடங்காத அருட்கொடைகளைத் தந்த அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுமாறு அனைவரையும் நபியவர்கள் பணித்தார்கள்.மேலும் இன்னொரு ஹதீஸில்"ஒரு மனிதன் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அறிவுரை வழங்குங்கள்" என்றார்.அதற்கு நபியவர்கள் "நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடவுங்கள்.ஏனெனில் நிச்சயமாக எல்லா நன்மைகளின் உள்ளடக்கமும் அதுதான்" என்று கூறினார்கள்,என அபூ ஸஈத் அல் குத்ரீ (ரழி) அவர்கள் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மேலும் மனிதர்களை சுவர்க்கத்தில் அதிககமாக பிரவேசிக்கச் செய்யும் காரியம் இறையச்சமும்,நற் பண்புமாகும்."என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் மேலும் நபியவர்களின்.وصلوا خمسكم எனும் வாசகம் அல்லாஹ் தன் தூதர் மீது கடமையாக்கிய ஐந்து நேரத் தொழுகைகளையும் நீங்கள் தொழுது வாருங்கள் என்பதைக் குறிக்கின்றது.எனவே நாளை மறுமை நாளில் அடியானிடம் முதலில் விசாரிக்கப்படுவது அவனின் தொழுகையைப் பற்றியதாகும்.என்பதுவும் இங்கு கவணிக்கத் தக்கதாகும்.மேலும் நபியவர்களின்وصوموا شهركم எனும் வாசகம் ரமழான் மாத நோன்பைக் குறிக்கின்றது.இந்த மாதத்தில் இந்த உம்மத்தினருக்காக மேலதிமாக அருட் கொடைகள் வருசிக்கப்படுகின்றன,மேலும் நரகிலிருந்து விடுதலை அளிக்கப்படுகின்றன,இன்னும் ஏராளமான நன்மைகளும் வழங்கப்படுகின்றன.மேலும் இந்த ஹதீஸ் இஸ்லாத்தின் கடமைகளில் மூன்று கடமைகளை உள்வாங்கியுள்ள போதிலும் இதில் ஹஜ்ஜு பற்றிக் குறிப்பிடவில்லை.ஏனெனில் இந்த கருமங்கள் தினமும் அல்லது வருடம் தோரும் திரும்பத் திரும்ப நிகழ்கின்றபடியால் அதனை நிறைவேற்றுவது பாரமாகத் தெரியும்.எனவே நபியவர்கள் இவற்றைக் குறிப்பிட்டுக் கூறி அதனைப்பற்றி அறிவுறுத்தினார்கள்.மேலும் நபியவர்களின்أطيعوا أمراءكم உங்களின் அதிகாரிளுக்குக் கட்டுப்பட்டு நடவுங்கள்"எனும் வாசகம் கலீபாக்கள்,அரசர்கள்,ஏனைய அதிகாரிகளையும் மற்றும் உலமாக்களையும் குறிக்கும்.அல்லது பொதுவாக அநியாய காரன் சர்வாதிகாரி என்ற பாகுபாடின்றி உங்களின் விவகாரங்களுக்குப் பொருப்பாகவுள்ள சகலருக்கும் அவர்கள் அரசாயினும்,அமைச்சர்களாயினும் அனைவருக்கும் கட்டுப்பட்டு நடப்பதை இது குறிக்கும்.ஆனால் படைத்தவனுக்கு மாறு செய்யும் விடயத்தில் எந்தவொரு சிருஷ்டிக்கும் அடிபணியக் கூடாது.மேலும் ஒரு ஹதீஸில்"அல்லாஹ்வுக்கு அஞ்சி நடவுங்கள்,இன்னும் "அவன் சொல்வதைக் கேட்டு அவணுக்கு வழிப்பட்டு நடவுங்கள் என்று உங்களை அறிவறுத்துகின்றேன்"எனும் நாயக வாக்கு பதிவாகியுள்ளது.அதனை அபூ தாவுத்,திர்மிதீ என்போர் அறிவித்துள்ளனர்.மேலும் அஷ்ஷைக் அல்பானீ அவர்கள் அதனை ஸஹீஹான ஹதீஸ் என குறிப்பிட்டுள்ளார்கள்.مشكاة المصابيح(1/185